tamilnadu

திருச்சியில் 93 சதவீதம் தேர்ச்சி

திருச்சிராப்பள்ளி, ஏப்.20- திருச்சி மாவட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை 247 பள்ளிகளைச் சேர்ந்த 15 ஆயிரத்து 919 மாணவர்களும் 18 ஆயிரத்து 563 மாணவிகளும் என மொத்தம் 34 ஆயிரத்து 482 மாணவ, மாணவிகள் எழுதி இருந்தனர். அதில் 14 ஆயிரத்து 440 மாணவர்களும் 17 ஆயிரத்து 820 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் 93.56 ஆகும். மாநில அளவில் திருச்சி மாவட்டம் 13 ஆவது இடத்தை பிடித்துள்ளது.