tamilnadu

திண்டுக்கல்: மறைமுகத் தேர்தலில் வேட்புமனு கிழிப்பு, வாக்குப்பெட்டி உடைப்பு ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிய அதிமுக

திண்டுக்கல், ஜன.12- உள்ளாட்சி மறைமுகத் தேர்த லில் திண்டுக்கல் மாவட்டம் திண் டுக்கல் ஊராட்சி ஒன்றியத்தில்  திமுக கூட்டணி அதிக இடங்க ளைப் பெற்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அதிமுக ஒன்றி யச் செயலாளர் வேட்புமனுவை  கிழித்து தேர்தல் அதிகாரியின் முகத்தில் வீசி தனது “அதிமுக கட்சியின் ஒழுக்கத்தையும், தேர் தல் ஜனநாயகத்தையும்” உயர்த்திப் பிடித்தார் இவருக்கு சளைத்தவர் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் பாட்டாளிமக்கள் கட்சியைச் சேர்ந்த பெண் உறுப்பினர் “நாற்கா லிகளை உடைத்து” அவரது கட்சிக்கு பெருமை சேர்த்தார். திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய தலைவர் பொறுப்பை ஏற்கும் என் பது உறுதியான நிலையில் அதி முகவினர் தனது கட்சியின் கட்டுப் பாட்டை காப்பாற்றுவதற்காக “பெரும் ரகளையில்” ஈடுபட்டனர். சனிக்கிழமை காலை 11 மணிக்கு திமுக அணியில் உள்ள திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக உறுப்பினர்கள் 11 பேர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத் திற்கு வந்தனர்.  எல்.பி.எப் தொழிற்சங்க மாநி லத்தலைவர் ம.பசீர்அகமது, திமுக ஒன்றியச் செயலாளர் நெடுஞ்செழியன், நகர் செயலா ளர் ராஜப்பா, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, திண் டுக்கல் மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், மாவட்டக்குழு உறுப்பினர் பி.கே.கருப்புசாமி ஒன்றியச் செயலாளர் அஜாய், நகர் செயலாளர் ஆசாத் உள்ளிட்டபலர் உடன் சென்றனர். குறிப்பிட்ட இடத்தில் அனைவரும் நிறுத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகள் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். ஒவ்வொரு உறுப்பினரிடமும் வெற்றிச் சான்றிதழ் இருக்கிறதா என்பதை உறுதி செய்த பின்னரே  காவல்துறையினர் அனுமதித்த னர்.  இவர்களைத் தொடர்ந்து அதி முக ஒன்றியச் செயலாளரும் முள்ளிப்பாடி ஒன்றியக்கவுன்சில ருமான ஜெயசீலன் தலைமை யில் அதிமுக, பாமக உறுப்பி னர்கள் ஆறு பேர் வந்தனர். ஆனால் அவர்களிடம் காவல்துறையினர் எந்தச் சான்றிதழையும் கேட்க வில்லை. இந்த நிலையில் கூட்ட தேர்தல் நடைபெறும் அரங்கத் தில் என்ன நடக்கிறது என்பதை படம் எடுக்க செய்தியாளர்கள் யாரையும் அனுமதிக்கவில்லை.  1-ஆவது வார்டு சுயேட்சை உறுப்பினர் பார்வதி, 12-ஆவது வார்டு உறுப்பினர் மல்லிகா ஆகி யோர் வாக்களிக்க வரவில்லை. இதையடுத்து தேர்தல் அரங்கிற்குள் அதிமுக ஒன்றியச் செயலாளர் ஜெயசீலன் தலை மையில் அதிமுகவினர் ஒரு கல வரச் சூழலை உருவாக்கினர். அலு வலகத்திற்குள் அதிமுகவினர் போட்ட கூச்சல் செய்தியாளர் களுக்கு கேட்டது. செய்தியா ளர்கள் உள்ளே சென்று செய்தி சேகரிக்க தயாராக இருந்தனர். அதிமுகவினர் எப்படியாவது இந்தத் தேர்தலை நிறுத்த வேண்டும். ரத்து செய்ய வேண்டு மென அதற்கான அனைத்த முயற்சிகளையும் எடுத்தனர்.  அதிமுக உறுப்பினர் ஜெய சீலனுக்கு தலைவர் பதவிக்கான வேட்புமனு கொடுக்கப்பட்டது. வேட்புமனுவை அவர் கிழித்து தேர்தல் அதிகாரியான கோட் டாட்சியர் முகத்தில் வீசினார். பாமகவைச்சேர்ந்த உறுப்பினர் பிருந்தா பரசுராமன் அங்கிருந்த நாற்காலியை எடுத்து வீசினார். பிறகு வாக்குப்பெட்டியை தூக்கி போட்டு உடைத்துள்ளார். மற்ற அதிமுக பெண் உறுப்பினர்களும் தகராறில் ஈடுபட்டனர்.  இதையடுத்து பழனி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், கே.பாலபாரதி, சச்சிதானந்தம் மதிமுக மாவட்டச் செயலாளர் செல்வராகவன், ஆகி யோர் தேர்தல் முடிவை அறி வியுங்கள் இல்லையெனில் அதி முக ஒன்றியச் செயலாளர் ஜெய சீலனை அங்கிருந்து அப்புறப் படுத்துங்கள் எனக் கூறி ஆர்ப் பாட்டம் நடத்தினர். காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களு டன். சமாதானம் பேசினார்.  இதற்கிடையில் தேர்தல் அதி காரியான கோட்டாட்சியர் மாவட்ட ஆட்சியரிடம் “நிலைமை”-யை அலைபேசியில் தெரிவித்துவிட்டு மீண்டும் மன்ற அரங்கத்திற்குள் நுழைய முயன்றார். அவரை அதிமுக, பாமக உறுப்பினர்கள் தடுத்துரகளையில் ஈடுபட்டனர். பின்னர் நடைபெற்ற வாக்கெ டுப்பில் வாக்கெடுப்பில் ஒன்றி யத்தலைவராக ராஜா அய்யாச் சாமி தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்த னர். இதனையடுத்து மன்றத்திலி ருந்து வெளியேறிய அதிமுக ஒன்றியச் செயலாளர் ஜெயசீலன் எங்களை வாக்களிக்க அனுமதிக்க வில்லை என்று செய்தியாளர்களி டம் பொய்யான தகவலை தெரி வித்தார். அமைச்சர் சீனிவாசன் தொகுதிக்குள் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக கூட் டணி ஒன்றியத்தை கைப்பற்றியுள்ளது.

;