வெள்ளி, பிப்ரவரி 26, 2021

tamilnadu

img

ஆசிரியர் பணிக்கு வயதுக் கட்டுப்பாடு.... 1.25 லட்சம் மாணவர்களின் வேலை கேள்விக்குறி?

பழனி:
2098 முதுகலை பட்டதாரி பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முதுகலை படிப்பு முடித்து பி.எட். படித்தவர்கள் இந்த தேர்வை எழுதலாம். தேர்வு ஜூன் 26,27 தேதிகளில் ஆன் லைனில் நடைபெறுகிறது. மார்ச்1 முதல் மார்ச் 25 வரை விண்ணப்பிக்கலாம்.

இந்தத் தேர்வுக்கு முதல் முறையாக வயது வரம்பு கட்டுப்பாட்டை  தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளதுமாணவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  வயது வரம்பு அமல்படுத்தப்படுவ தால் 1.25 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவர். பொதுப் பிரிவுக்கு 40, இட ஒதுக்கீட்டு பிரிவுக்கு 45 என வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டு, மூன்று நாட்கள் இடைவெளியில் மாணவர்கள்  வயது வரம்பால் தேர்வை எழுத முடியாத நிலை  ஏற்படும். அரசு ஊழியர் ஓய்வு வயது 59 ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் தேர்வுக்கு வயதுக் கட்டுபாடு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பழைய முறைப்படி வயது வரம்பு இல்லாமல் தேர்வுக்கு விண்ணப்பிக்க அனுமதி வழங்க வேண்டும் என ஆயக்குடி மரத்தடி இலவசப் பயிற்சி மைய இயக்குநர் இராமமூர்த்தி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

;