tamilnadu

img

இலக்கிய உலகில் புதிய தடம் பதித்தவர் தோல் நாவலாசிரியர் டி.செல்வராஜ்

திண்டுக்கல், டிச.30- இலக்கிய உலகில் தடம் பதித்த மாமனிதர் “தோல் நாவலாசிரியர் டி.செல்வ ராஜ்” என எழுத்தாளர்கள் அவரது நினை வேந்தல் நிகழ்ச்சியில் புகழாரம் சூட்டி னர்.  சாகித்ய அகாதெமி விருது பெற்ற தோல் நாவல் ஆசிரியரும் வழக்கறிஞரு மான டி.செல்வராஜ். கடந்தவாரம் கால மானார். அவரது படத்திறப்பு, நினைவேந் தல் நிகழ்வு ஞாயிறன்று திண்டுக்கல்லில் நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் ஆகிய அமைப்புகள் சார்பாக நடை பெற்ற நிகழ்விற்கு தமுஎகச கௌரவத் தலைவர் ச.தமிழ்செல்வன் தலைமை வகித்தார். டி.செல்வராஜின் மனைவி பாரத புத்ரி முன்னிலை வகித்தார்.  எழுத்தாளர் ச.தமிழ்செல்வன், டி. செல்வராஜ் குறித்து பேசுகையில், பொது வுடமை இயக்கத்தில் ஆற்றல் வாய்ந்த வாசிப்பும் எழுத்துத் திறனும் கொண்டவர் டி.எஸ். திருநெல்வேலி மாவட்டத்தில் விவ சாயத் தொழிலாளர்களின் மரக்கால் போராட்டம் பற்றிய நாவல் தான் மலரும் சருகும். அதே போல தேனீர் நாவல் தேயி லைத் தோட்;டத் தொழிலாளர்களை மையப்படுத்தப்பட்டது. திண்டுக்கல் நகரில் நடைபெற்ற தோல் பதனிடும் தொழி லாளர்களின் போராட்டம் தான் தோல் நாவல். தோழர்கள் ஏ.பாலசுப்ரமணியம், எஸ்.ஏ.தங்கராஜன், மதனகோபால் ஆகி யோரை கதாப்பாத்திரங்களாக அதில் உலவவிட்டிருப்பார். 2012-ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருது பெற்றது தோல் நாவல். ஆண்டாளை பற்றி ஒரு ஆராய்ச்சி யாளர் சொன்னதாக கூறியதற்காக மத வெறி சக்திகள் பிரச்சனையைக் கிளப்பி கவிஞர் வைரமுத்துவுக்கு கொடுக்கப்பட இருந்த டாக்டர் பட்டம் மறுக்கப்பட்டிருக்கி றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடது சாரி அமைப்புகளின் தலைவர்கள் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். ஆனால் தோழர் டி.செல்வராஜ். அதே ஆண்டாளைப் பற்றி நோன்பு என்ற சிறு கதை எழுதியுள்ளார். ஆண்டாளை பற்றி எழுதப்பட்ட அந்த புத்தகத்தை வாசித்த இந்துத்துவாவாதிகள் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பாடத் திட்டமாக சேர்க்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் அந்தச் சிறுகதை வாபஸ் பெறப்பட்டது. மாதொருபாகன் எழுதிய பெருமாள் முருகனுக்காக நீதிமன்றத்தில் தான் வாதாட போவதாகத் தெரிவித்தார். அனைத்துப் படைப்புகளையும் வாசிப்ப தோடல்லாமல் விமர்க்கவும், பாராட்டவும் செய்வார் டி.எஸ். என்றார்.  டி.செல்வராஜின் படத்தை தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநி லப் பொதுச் செயலாளர் இரா.காமராசு, தமுஎகச மாநிலப் பொதுச்செயலாளர் ஆத வன்தீட்சண்யா ஆகியோர் திறந்துவைத்த னர். இரா.காமராசு பேசுகையில், தொ.மு.சி.ரகுநாதன், தி.க.சி, போன்ற எழுத்தாளர்களைப் போலவே டி.செல்வ ராஜ் சிறந்த படைப்புகளை கொண்டு வந்த வர். இறுதி மூச்சுவரை தான் ஒரு கம்யூ னிஸ்ட் என்பதில் உறுதியாக நின்றார். தொ.மு.சி.ரகுநாதனின் பஞ்சும் பசியும் நாவல் எப்படி பேசப்பட்டதோ, அதே போல டி.செல்வராஜ் எழுதிய மலரும் சருகும் பேசப்பட்ட நாவல். தேனீர், தோல் போன்ற நாவல்கள் எழுத்தின் உச்சம் பெற்ற நாவல் கள். தமிழ்ஒளி போன்ற கவிஞர்கள் தலை மறைவாக இருந்த போது அடைக்கலம் கொடுத்தவர் டி.எஸ். நெருக்கடி காலத்தில் அதற்கெதிராக எழுதிய எழுத்தாளர் டி.எஸ். என்றார். ஆதவன் தீட்சண்யா பேசியதாவது, பஞ்சம் பிழைக்க வந்தவர்களுக்கு அடைக் கலம் தந்த தொழில் நகரம் ஓசூர். இன்றைக்கு அந்த ஊரில் தொழிற்சாலை கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. ஒரு மாதத்தில் இரண்டு வாரம் வரை தொழிலா ளர்களுக்கு வேலை இல்லை என்று விடுப்பு கொடுக்கிறார்கள். நிச்சயமற்ற வாழ்க்கை யாக அச்சத்தின் பிடியில் வாழ்கிறார்கள். இந்த மனிதர்களைப் பற்றி எழுதவில்லை யே என்ற வருத்தம் தோழர் டி.செல்வராஜ் நாவல்களைப் படிக்கும் போது உறுத்திக் கொண்டே இருக்கும். அது பற்றிய ஒரு நாவலை நான் எழுதினால் தான் டி.செல்வ ராஜூக்கும் நான் செலுத்தும் அஞ்சலியாக இருக்கும். எனவே ஒவ்வொரு படைப்பாளி யும் தோழர் டி.எஸ். போல எழுதக் கற்றுக் கொள்ள வேண்டுமென்றார். தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் இராம லிங்கம் பேசியதாவது: தொ.மு.சி.யின் பஞ்சும் பசியும், டி.எஸ். சின் மலரும் சருகும், தேனீர், கு.சின்னப்ப பாரதியின் தாகம், சங்கம், கே.முத்தையா எழுதிய விளைநிலம், உலைக்களம், ஆகிய நாவல்கள் தமிழகத்தில் உள்ள தொழி லாளி விவசாயிகளின் போராட்டங்களை மையப்படுத்தி எழுதப்பட்டவைகளாகும். சாகித்ய அகாதெமி விருது பெற்ற தோல் நாவல், தோல் பதனிடும் தொழிலாளர் களின் ரத்தமும், சதையும் போன்ற அச்சு அசலான கதை களம் கொண்டது. அவரது நாடகங்கள் மக்கள் மத்தியிலும் தொழிலா ளர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றது. அவர் எழுதிய வேட்டை என்ற நாடகம் மதுரையில் அரங்கேற்றப்பட்டது. சின்னா ளபட்டி, கணக்கன்பட்டி தோழர்கள் அதில் நடித்திருப்பார்கள். நெருக்கடி நிலையை நகைச்சுவையாக கிணடலடித்த நாடகம் அது. நம்மை விட நமது எதிரிகள் நமது படைப்புகளை அதிகம் வாசிக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.  கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநில செயலாளர் பேராசிரியர் ஆனந்த குமார் பேசியதாவது:- அவருடைய எழுத்துக்களை அவர் எழுதினார் என்பதை விட சுவாசித்தார் என்று சொல்ல வேண்டும். இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அடுக்கம் நாவ லின் இறுதிப்பகுதியை நிறைவு செய்து கொடுத்தார். ஒரு நாவல் எழுதுவதற்கு முன்பு அது தொடர்பாக ஏராளமான ஆதா ரங்களையும் தகவல்களையும் திரட்டி விட்டுத்தான் எழுதத் தொடங்குவார். அடுக்கம் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி வாழ்க்கை பற்றிய நாவலாகும். இசைஞானி இளைய ராஜா, அவரது சகோதரர் பாஸ்கரன் போன்ற வர்கள் அவருடன் நெருங்கி பழகிய வர்கள். கேரள மாநில முதல்வராக இருந்த தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட்டுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நேரடியாக பேசுகிற அளவிற்கு செல்வாக்கு மிக்க நபராக இருந்தார். நீதித்துறை பற்றி அவர் எழுதிய அக்கினிக்குண்டம் நாவல் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. ஜெயகாந்தனுக்கு முந்தைய இலக்கிய உலகில் புதிய தடம் பதித்த மனிதர். ஒரு முறை ஜெயமோகன் தோழர் டி.எஸ். பற்றி விமர்ச்சித்தார். சாகித்ய அகா டமியை கம்யூனிஸ்ட்டுக்கள் கைப்பற்றி விட்டார்கள் என்றார். அதாவது அறிவுத் தளத்தை கம்யூனிஸ்ட்டுக்கள் கைப்பற்றி விட்டார்கள் என்பதைத் தானே ஜெய மோகன் விமர்ச்சிக்கிறார். அது உண்மை தானே என்று அந்த விமர்சனத்தை ஏற்றுக் கொண்டார் டி.எஸ் என்றார். திண்டுக்கல் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் க.பாலபாரதி பேசியதாவது, இதே ஊரில் கட்சிப்பணியை நான் தொடங்கியிருந்தாலும் தோழர் டி.எஸ். பற்றி அவ்வளவாக எனக்கு தெரியாது. அவரது கதைகளை செம்மலரில் வாசித்து தெரிந்து கொண்டேன். இலக்கியத்திற்கு அப்பாற்பட்டு இயக்கத்தோழராக மிளிர்ந்த வர் டி.எஸ். இரவு 12 மணியானாலும் தொழி லாளர்களுக்கு ஜாமீன் எடுக்க வந்து நிற்பார். எந்த வழக்குக்கும் அவர் பணம் கேட்டதாக தெரியவில்லை. இலக்கி யத்தையும், இயக்கத்தையும் இரண்டு கண்களாக பாவித்தவர் டி.எஸ் என்றார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் என்.பாண்டி பேசி யதாவது: நெருக்கடி காலத்தில் அவரது வேட்டை நாடகம் வரவேற்பைப் பெற்றது. வாலிபர் சங்க நிகழ்ச்சிகளில் அந்த நாடகத்தை அரங்கேற்றினோம். நம்ம ஊரைச் சேர்ந்த வி.கே.முருகன் போன்றவர்கள்அதில் நடித்திருப்பார்கள். போலீஸ் கொடுமை சித்ரவதை பற்றி அந்த நாடகத்தில் அதி கம் பேசப்பட்டது. தடம் பார்த்து நடப்ப வர்கள் மனிதர்கள், தடம் பதித்து நடப்ப வர்கள் மாமனிதர்கள் என்ற பொன் மொழிக்கேற்ப டி.எஸ். ஒரு மாமனிதர் என்றார். இந்நிகழ்ச்சியில் கலை இலக் கிய பெருமன்றத்தின் கௌரவத்தலைவர் இரா.விச்சலன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சச்சிதா னந்தம், டாக்டர் கு.ராஜேஸ்வரன், சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ஆர்.கணேசன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.முத்துச் சாமி, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அரிகிருட்டிணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  டி.செல்வராஜின் பேத்தியும் இளம் கவி ஞருமான நேகா இரங்கல் கவிதை வாசித்தார். பாடகர் கோபால் இரங்கல் பாடல் பாடினார். மூத்த மகன் சித்தார்த் தன்பிரபு நன்றி கூறினார். நிகழ்வை ச. சிவக்குமார், அஜய்பிரபா, இலமு, கவி வாணன், நாகேந்திரன், குடும்பத்தினர் சார்வாகன்பிரபு, வேதஞானலட்சுமி ஆகி யோர் ஒருங்கிணைத்தனர்.  இந்நிகழ்வில் டி.செல்வராஜ் குடும்பத்தினர் அவரது நினைவாக ரூ.2 லட்சத்திற்கான தொகையை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநில கௌரவத் தலைவர் ச.தமிழ்செல்வனிடம் மூத்த மகன் சித்தார்த்தன் பிரபு வழங்கு வதாக அறிவித்தார். இந்த வைப்பு நிதி மூலம் டி.செல்வராஜின் நினைவாக ஆண்டு தோறும் இலக்கிய விருது வழங்குவது தொடர்பாக மாநில மையம் அறிவிக்கும் என ச.தமிழ்செல்வன் தெரிவித்தார்.

;