தருமபுரி, ஜன. 21- தருமபுரி நகராட்சி, நரசையர்குளம் கந்தசாமி வாத்தி யார்தெருவில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி யுள்ளனர். தருமபுரி நகராட்சிக்குட்பட்டது 17-வது வார்டு நரசை யர்குளம், காந்தசாமி வாத்தியார்தெரு. இந்த சாலையில் பதிக்கப்பட்டுள்ள பாதாளசாக்கடையில் அடைப்பு ஏற்ப்பட்டதால் கடந்த இரண்டு மாதத்திற்கு முன் சாலை யின் நடுவே குழி தோண்டி பாதாளசாக்கடை கால்வாய் அடைப்பு சரிசெய்யப்பட்டது. இதற்காக 50, அடி நீளம் கொண்ட தார்சாலையின் நடுவே குழியானது தொண்டப் பட்டது.இதனால் குண்டும் குழியுமாக உள்ள இடங்களில் கற்களை நிரப்பி உள்ளனர். இந்தசாலையானது, நகரின் மையப்பகுதி என்பதால் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. வாக னங்கள் செல்லும் போது மண்புகை மணடலமாக மாறு கிறது.மேலும், சாலையில் கொட்டப்பட்ட கற்கலால் இரு சக்கர வாகண ஓட்டிகள் கீழே விழும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே, உடனடியாக குண்டும் குழியுமாக உள்ள இச்சாலையை சீர் செய்ய வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.