tamilnadu

தருமபுரி, சேலம் முக்கிய செய்திகள்

இணைப்புச் சாலைக்காக 65 ஆண்டுகளாக காத்திருக்கும் பொதுமக்கள்

தருமபுரி, அக். 9- மிட்டாரெட்டிஅள்ளி-பொம்மிடி இணைப்புச் சாலைக்காக சுமார் 65 ஆண்டுகளாக காத்திருக்கும் மக்களின் கனவு நனவாக அரசு விரைந்து நடவ டிக்கை எடுக்க வேண்டும் எனபதே பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.  தருமபுரியிலிருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் உள்ளது மிட்டாரெட்டிஅள்ளி ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்டது கோம்பேரி மலை கிராமம். இந்தக் கிரா மத்திலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ள பொம்மிடிக்கு இணைப்புச் சாலை அமைக்க வேண்டும் என  மலை கிராம மக் கள் பல ஆண்டுகளாகப் போராடி வருகின் றனர். தற்போது இந்த மலை கிராம மக்கள் பொம்மிடிக்கு செல்ல வேண்டுமெனில் 12 கி.மீ தொலைவில் உள்ள தருமபுரி நகருக்கு வந்து, பின்னர் 36 கி.மீ பயணம் செய்ய வேண்டும். மிட்டாரெட்டிஅள்ளியிலிருந்து கோம்பேரி மலை அடிவாரம் வரையும், பொம்மிடியிலிருந்து ராமர் கோயில் மலை அடிவாரம் வரையிலும் சாலை உள்ளது. எனவே, மலை அடிவாரத்திலிருந்து கொண்டகரஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட காளி கரம்பு வழியாக ராமசாமி கோயில் வரை சுமார் 1.5 கி.மீ வரை சாலை அமைத் தால், கோம்பேரி மலை கிராம மக்கள் மட்டு மல்லாது மிட்டாரெட்டிஅள்ளி, மிட்டாதின் னஅள்ளி, நார்த்ம்பட்டி, லளிகம், நல்லம் பள்ளி, ஏ.ஜெட்டிஅள்ளி உள்ளிட்ட 20 ஊராட்சிகளைச் சேர்ந்த மக்களுக்கு பொம் மிடி செல்ல ஏதுவாக இருக்கும். மேலும், தருமபுரி நகரத்திலிருந்து தற் போது கடத்தூர் வழியாக பொம்மிடிக்கு செல்ல 38 கி.மீ தொலைவு பயணம் செய்ய வேண்டும். ஆனால், கோம்பேரி மலை கிராமம் வழியாக சாலை அமைத்தால், பொம்மிடிக்கு 20 கி.மீ மட்டும் பயணம் செய்தால் போதுமானது. இதனால், போக்கு வரத்துச் செலவு மற்றும் கால விரயத்தையும் கட்டுப்படுத்த முடியும். மிட்டாரெட்டிஅள்ளி - பொம்மிடி இணைப்புச் சாலை அமைக்க பல ஆண்டு களாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வரு கின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யும் தொடர் போராட்டத்தை நடத்தியுள்ளது. இந்தப் பகுதியில் ஆங்கிலேயர்கள் காலத் தில் குதிரை பரிமாற்றம் நடந்தது. அப்போது குதிரைகள் செல்லும் வழித்தடம் அமைக் கப்பட்டுள்ளது. எனவே மிட்டாரெட்டி அள்ளி - பொம்மிடி இணைப்புச் சாலையை மக்கள் நலன் கருதி அமைக்கவேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மாணவ, மாணவிகள் அறிவியல் சுற்றுலா 
சேலம், அக். 9-சேலத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர் நூற்றுக்கும் மேற்பட்டோர் முதன் முறையாக திருவனந்த புரம், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு அறிவியல் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். சேலத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையம், தும்பா ராக்கெட் ஏவுதள மையம் ஆகிய இடங்களுக்கு அறிவியல் சுற்றுலா சென்றுள்ளனர். இதற்கான ஏற்பாட்டை சேலம் டார்வின் அறிவியல் கழகம் செய்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு ஒருமுறை பள்ளி மாணவ மாணவியருக்கு அறிவியல் சுற்றுலா ஏற்பாடு செய்யப் பட்டு வருகிறது. இந்த ஆண்டு சேலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 13 மாவட்டங்களில் இருந்து 219 மாணவ, மாணவியர் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவியல் சிந்தனை களை வளர்த்தெடுக்கும் நோக்கில் அறிவியல் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பேருந்துகள் மூலம் சுற்றுலா பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் திருவனந்தபுரத்தில் உள்ள அறிவியல் மையத் தில், அறிவியல் கண்டுபிடிப்பாளர்களின் உரைகளை நேரடியாக கேட்கவும் அவர்களுடன் கலந்துரையாடல் செய்யவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து மாணவ, மாணவியர் கூறுகையில், பள்ளியில் படிக்கும் போது அறிவியல் சுற்றுலா செல்வது மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. மேலும் அறிவியல் துறை சார்ந்த சந்தேகங்களுக்கு விஞ்ஞானிகள் நேரடியாக விளக்கங்கள் அளிக்க இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இதனால் எதிர்காலத்தில் நாங்களும் சிறந்த விஞ்ஞானி களாக வளர்ந்து நாட்டிற்கு பல்வேறு புதிய கண்டுபிடிப்பு களை வழங்குவோம் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது என தெரிவித்தனர்.

;