கண்ணூர், ஜன. 2- மாறுபட்ட கருத்துகள் நிலவும் சூழ்நிலையில் சிஏஏ மீதான கேரள ஆளுநரின் அணுகுமுறை ஜனநாயக விரோதமானது என கேரள இடது ஜனநாயக முன்னணியின் ஒருங்கிணை ப்பாளர் ஏ.விஜயராகவன் கூறினார். கேரள மாநிலம் கண்ணூரில் நடந்து வரும் அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்கத்தின் தேசிய மாநாட்டின் இடையே, சங்கத்தின் அகில இந்திய தலைவரும் எல்டிஎப் ஒருங்கிணைப்பா ளருமான ஏ.விஜயராகவன் செய்தி யாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஆளுநர் என்பது ஒரு அரசமைப்பு சாசன பதவி. அதுபோல் சட்டமன்றம் என்பது அரசமைப்பு சாசனத்தின் படி அமைந்துள்ளது. அரசமைப்பு சாசனம் குறிப்பிட்டுள்ள குடிமகனின் உரிமை களுக்கு பாதகமான சட்டத்தை நாடாளு மன்றத்தில் நிறைவேற்றினால் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பிய வரலாறு உண்டு. குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யுமாறு கேரள சட்டமன்றம் இயற்றிய தீர்மானம் மக்களின் உண ர்வை மதித்து மேற்கொள்ளப்பட்டது. அதை கேரள ஆளுநர் வெளிப்படை யாக தொடர்ந்து விமர்சனம் செய்வது ஜனநாயக விரோதமானது. சட்டத்தை அமல்படுத்துவது ஆளுநரின் பணியல்ல. அது நிர்வாக நடவடிக்கை என விஜயராகவன் கூறினார்.