tamilnadu

கரன்சி பட்டியல் : இந்தியா நீக்கம்

புதுதில்லி,மே 29-அமெரிக்காவின் கரன்சி கண்காணிப்பு நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியா நீக்கப்பட்டுள் ளது.கேள்விக்குரிய அன்னியச் செலாவணிக் கொள்கைகளை உடைய நாடுகள் அமெரிக்காவின் கரன்சி கண்காணிப்பு நாடுகள் பட்டியலில் வைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் சீனா, ஜப்பான், ஜெர்மனி, சுவிட்சர் லாந்து, தென்கொரியா ஆகிய நாடுகளுடன் இந்தியாவும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்இடம் பெற்றது.இந்நிலையில் அமெரிக்க கருவூலத்துறை அமெரிக்க நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்துள்ள அரையாண்டு அறிக்கையில் இந்தியாவும் சுவிட்சர்லாந்தும் கரன்சி கண்காணிப்பு நாடுகள்பட்டியலில் இருந்து நீக்கப் பட்டுள்ளன.