tamilnadu

img

தெலுங்கு நடிகர் கிருஷ்ணம் ராஜூ காலமானார்

சென்னை, செப். 11- தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் நடிகர் கிரு ஷ்ணம் ராஜூ (83) உடல் நலக்குறைவால் ஞாயி றன்று (செப். 11) காலமா னார். தெலுங்கு திரையுலகில் கதாநாயகனாக நுழைந்து பிற்காலத்தில் வில்லனாக வலம் வந்தவர் கிருஷ்ணம் ராஜு. இவர் தெலுங்கில் 100க்கும் மேற்பட்ட படங்க ளில் நடித்துள்ளார். தெலுங்கு திரையுலகின் ‘ரிபல் ஸ்டார்’ என அறியப் படும் கிருஷ்ணம் ராஜூ அண்மையில் பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘ராதே  ஷியாம்’ படத்தில் நடித்திருந் தார். ஒன்றிய அமைச்சராக வும், நாடாளுமன்ற உறுப் பினராகவும் பதவி வகித்துள் ளார். மேலும் நடிப்பிற்கான நந்தி விருது, பிலிம்பேர் விருது உள்ளிட்ட பல்வேறு  விருதுகளையும் வென்றுள் ளார். இந்நிலையில், ஹைதரா பாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கிருஷ் ணம் ராஜூ ஞாயி்றன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  அவரது மறைவு  தெலுங்கு திரைப்படத் துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கிருஷ்ணம் ராஜூ மறை வுக்கு ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘முன்னாள் மத்திய அமைச் சரும், பிரபல திரைப்பட நடிக ருமான ரிபல் ஸ்டார் கிருஷ்ணம் ராஜூவின் மறைவு வருத்தம் அளிக்கி றது. நடிகராகவும், அரசியல் தலைவராகவும் மக்களுக்கு அவர் ஆற்றிய சேவைகள் மறக்க முடியாதவை. கிருஷ்ணம் ராஜுவின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்’’ என பதிவிட்டுள்ளார்.

;