tamilnadu

img

ரஜினிக்கு மத்திய அரசு விருது

புதுதில்லி, நவ.2- நடிகர் ரஜினிகாந்துக்கு சிறப்பு நட்சத்திரத்திற்கான “ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி” என்ற சிறப்பு விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் செய்தியாளர்களிடம் கூறுகை யில், கோவாவில் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழா வில் ரஜினிகாந்துக்கு இவ்விருது வழங்கப்படும். விருது வழங்கு வது தொடர்பாக ரஜினிகாந்துக்கு தெரிவித்துள்ளதாக கூறினார்.

50-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நவம்பர் 20 அன்று தொடங்கி 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இவ்விழா வில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட படங்கள் மற்றும் இந்தியாவில் பல்வேறு மொழிகளில் வெளியான 26 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. 50 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பழம்பெரும் படங்களும் காட்சிக்கு வைக் கப்பட்டு திரையிடப்பட உள்ளது. இதில் தமிழில் வெளியான ஒத்த செருப்பு, ஹவுஸ்ஓனர் ஆகிய படங்கள் திரையிடப்படுகின்றன.