tamilnadu

img

இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல் கலாம் விருது

இஸ்ரோ தலைவர் சிவனுக்கு, அப்துல் கலாம் விருதை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார்.

தமிழக அரசால் அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில், சந்திரயான் 2 திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட இஸ்ரோ தலைவர் சிவனுக்கு, தமிழக அரசு சார்பில் அப்துல்கலாம் விருது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல் கலாம் விருதை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார். மேலும், 8 கிராம் தங்க பதக்கம், 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் ஆகியவை தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டது.

முன்னதாக அறிவியல் தொழில்நுட்பத்தில் ஏராளமான விருதுகளை வாங்கிக் குவித்துள்ள சிவன், கடந்த 1999-ஆம் ஆண்டில் விக்ரம் சாராபாய் விருது, 2007-ஆம் ஆண்டில் இஸ்ரோ விருது, 2012-ஆம் ஆண்டில் டாக்டர் பிரயன் ராய் விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.