தமிழகத்தில் இன்று வெப்பச்சலனம் காரணமாக பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம், கன்னியாகுமரி, திண்டுக்கல், திருவண்ணாமலை, திருவாரூர், திருவள்ளூர்,நீலகிரி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
கோவையின் பல பகுதிகளில் இன்று பிற்பகலில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதைத்தொடர்ந்து தொண்டாமுத்தூர், காந்திபுரம் உள்ளிட்ட பலபகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்து வருகிறது.