தமிழகத்தில், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள கே.கே நகர் மற்றும் எம்.ஜி.ஆர் நகரில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில், போலீஸார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த கே.கே.நகரைச் சேர்ந்த குட்டியம்மாள் மற்றும் சரவணன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 லட்சம் ரூபாய்க்கு மதிப்புள்ள 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.