திங்கள், ஜனவரி 18, 2021

tamilnadu

img

வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி  

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் நா.தனராஜன் தலைமை வகித்தார். பேரா நா.பழனிவேலு வரவேற்றார். வட்டாட்சியர் க.ஜெயலெட்சுமி சிறப்பு ரையாற்றினார். தேர்தல் துணை வட்டாட்சியர் எஸ்.யுவராஜ், மண்டல துணை வட்டாட்சி யர் கவிதா, துணை வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் க.சுமித்ரா, கிள்ளி வளவன், சுப்பிரமணியன், கிராம நிர்வாக அலுவலர் என்.ராஜசேகரன், பேரா ராஜ்மோகன், ராணி, ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். நிறைவாக பேரா ஜி.முத்துக் கிருஷ்ணன் நன்றி கூறினார். பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

;