செவ்வாய், ஜனவரி 26, 2021

tamilnadu

இன்று பட்டுக்கோட்டையில் தமுஎகச கலை இலக்கிய இரவு

 தஞ்சாவூர், ஏப்.13- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் மக்கள் கவி ஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த நாள் விழா- 40 ஆவது கலை இலக்கிய இரவு ஏப்.14 இரவு காசாங்குளம் வடகரை, கவுரவாம்பாள் கல்யாணசுந்தரம் நினைவரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம், எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா உரை வீச்சு மற்றும் பிரபல கவிஞர்கள் பங்கேற்கும் கவியரங்கம், கலை நிகழ்ச்சிகள், சிலம்பாட்டம், மக்கள் கலைகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், புதுகை பூபாளம் கலை நிகழ்ச்சி, புதுக்கோட்டை சுகந்தி பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வு கள் நடைபெற உள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலை திரைப்பட இயக்குநர் லெனின் பாரதி உரையாற்றுகிறார். முன்னதாக காலை மக்கள் கவி ஞரின் சிலை, சமூக நீதிப் போராளிகள் உருப் படங்களுக்கு மாலை அணிவித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. இதன் ஏற்பாடுகளை தமுஎகச நிர்வாகிகள் செய்துள்ளனர். 

;