tamilnadu

புயல்-மழையின் காரணமாக இன்று நடைபெறவிருந்த ரயில், சாலை மறியல் போராட்டம் ரத்து.....

தஞ்சாவூர்:
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நவ.26 (திங்கட்கிழமை) நடைபெறவிருந்த ரயில், சாலை மறியல்போராட்டம், வேலை நிறுத்த போராட் டங்கள் ரத்து செய்யப்படுவதாக அகிலஇந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தஞ்சாவூர் மாவட்டஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது. 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண்மை சட்டங்கள், புதியஉணவு கொள்கை, மின்சார திருத்தசட்டம், தொழிலாளர் சட்ட திருத்தங் கள் ஆகியவற்றை கண்டித்து இந்தியாமுழுவதும் அனைத்து தொழிற்சங்கங் கள் சார்பில் நவ.26 ஆம் தேதி ஒரு நாள்வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.இந்த போராட்டத்துக்கு பல்வேறுஎதிர்கட்சிகளும், அரசியல் இயக்கங்களும் ஆதரவு தெரிவித்து வந்தன. மேலும், நவ.26 போராட்டத்தினை விளக்கி பல இடங்களில் கடந்த ஒருவார காலமாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் நிவர் புயல் மழை காரணமாக, புயல் மழை பெய்யும் மாவட்டங்களில் இந்த போராட்டம் ரத்து செய்யப்படுகிறது.இதுகுறித்து அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு மற்றும் தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் என்.வி.கண்ணன் கூறியதாவது:மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் விரோத சட்டங்கள், கொள்கைகளை கண்டித்து திங்களன்று நாடு முழுவதும் வேலை நிறுத்தம், போராட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் நிவர் புயல் மழைகாரணமாக மாநில மையத்தின் ஆலோசனையின் படி தஞ்சாவூர் மாவட்டம் உள்ளிட்ட மழை பெய்யும் மாவட்டங்களில் இந்த போராட்டம் ரத்து செய் யப்படுகிறது என்றார்.

;