tamilnadu

img

மழைக்கு வீடு இடிந்து விழுந்தது

 கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகாவிற்கு உட்பட்ட திருப்புறம்பியம் ஊராட்சியில் உத்திரை கிராமம் மெயின் ரோட்டில் வசித்து வரும் மொட்டையன் மகன் பாலு என்கிற பால சுப்பிரமணியம் மொசைக் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் குடும்பத்தோடு மனைவி அவரது இரு குழந்தை கள் தம்பி வீரமுத்து தந்தை தாய் ஆகியோர் தனித் தனியாக ஒரே  வீட்டில் வெள்ளிக்கிழமை படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். திடீரென்று வெள்ளிக்கிழமை நள்ளிரவில் இரண்டு நாட்களாக பெய்த கன மழை யினால் பாலுவின் வீட்டின் சுவர் வெளிப்புறமாக இடிந்து விழுந்தது. இதில் சுவர் அருகே படுத்திருந்த பாலுவின் தம்பி வீரமுத்து நொடிப் பொழுதில் சுதாரித்துக் கொண்டு எழுந்து விட்டார். இதனால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஆனாலும் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து முற்றிலும் சேதமடைந்துள் ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட திருப்புறம்பியம் கிராம நிர்வாக அலு வலகத்தில் தகவல் தெரிவித்தும் இதுவரை யாரும் விசாரிக்கவில்லை என கூறப்படுகிறது. ஆகவே   மழையினால் சுவர் இடிந்து விழுந்த குடும் பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.