ஞாயிறு, பிப்ரவரி 28, 2021

tamilnadu

img

முதல்வர் வாக்குறுதியை மறந்துவிட்டார்... அரசு ஊழியர் சங்க பொதுச் செயலாளர் பேட்டி

தஞ்சாவூர்:
தஞ்சாவூரில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில மாநாடு வரும் செப்.27, 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.இதுகுறித்து தஞ்சாவூரில் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலர் அன்பரசு திங்கள்கிழமை மாலை செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

‘தமிழ்நாட்டில் 33 மாவட்டங்களில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள மாநகராட்சி மைதானத்தில் செப். 27, 28, 29 ஆம் தேதிகளில் மாநில மாநாடு நடைபெறவுள்ளது. அரசுத் துறையில் வேலை செய்யும் 7 லட்சம் ஊழியர்களுக்கான உரிமைகள், கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாநாடு நடத்தப்படவுள்ளது. இதில், தமிழ்நாட்டில்உள்ள ஒரு லட்சத்துக்கும் அதிகமான அரசுஊழியர்கள் பங்கேற்பர்.
அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் என சட்டப் பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறினார். இதை நிறைவேற்ற வலியுறுத்தி ஜனவரியில் காலவரையற்ற போராட்டத்தை நடத்தினோம். முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டபடியும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனக் கூறியதன் அடிப்படையிலும் போராட்டத்தைத் திரும்பப்பெற்றோம். ஆனால், முதல்வர் வாக்குறுதியை மறந்துவிட்டார்.தற்போது, போராட்டத்தில் ஈடுபட்ட 5,068 பேர் நிரந்தர நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளனர். மேலும், 4,000 பேர் பணியிட மாற்றம்செய்யப்பட்டனர். பணி ஓய்வு பெறுபவர் களுக்கு ஓய்வூதியம் தர மறுக்கின்றனர். பழிவாங்கும் நடவடிக்கைகளைச் செயல்படுத்திவருகிறது. எங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி, பழிவாங்கும் முயற்சியை கைவிட வேண்டும். 

இதுதொடர்பாக தஞ்சாவூரில் நடைபெறும் மாநில மாநாட்டுக்குள் அரசு தனதுமுடிவை அறிவிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் இந்த மாநாட்டில் செப். 29 ஆம் தேதிஅடுத்த கட்டத் தீவிரப் போராட்டம் அறிவிக்கப்படும்” என்றார் அன்பரசு.மாநிலச் செயலாளர்கள் பன்னீர்செல்வம், சௌந்தரராஜன், நிர்வாகக் குழுத் தலைவர் கோவிந்தராஜன், மாவட்டத் தலைவர் கோதண்டபாணி, மாவட்டச் செயலர் ரெங்கசாமி, மாவட்ட துணைத் தலைவர் சிவ.ரவிச்சந்திரன், மாவட்ட இணைச் செயலாளர் செந்தில்குமார், சத்துணவு ஊழியர்கள் சங்க மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

;