மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் தூண்டில் வளைவு அமைக்க கோரிக்கை
தஞ்சாவூர் ஆக.4- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியை அடுத்த மல்லிப்பட்டினத்தில் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தி ற்கு மீனவர் பேரவை மாநில பொதுச்செய லாளர் ஏ.தாஜூதீன் தலைமை வகித்தார். விசை ப்படகு மீனவர் சங்கச் செயலாளர் இப்ரா ஹீம், நாட்டுப்படகு மீனவர் சங்கத் தலைவர் செய்யதுமுகமது, செயலாளர் அப்துல்ரகு மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், “தமிழக அரசால் உலக வங்கி நிதி உதவியுடன் தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம் ஆகிய இரு இடங்களில் புதிதாக மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்பட்டதற்கு, தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும், இந்த துறைமுகப் பகுதியில்(தூண்டில் வளைவு) அலை தடுப்பு இல்லாததால் அலையின் சீற்றம் துறைமுக பகுதியில் அதிகரித்து வருவதால், படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மீனவர்கள் துயரமும் நஷ்டம் அடைந்து வருகின்றனர். எனவே தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும். மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம் துறைமுகங்களில் தனித்தனியாக ஹார்பர் கமிட்டி(துறைமுக மேலாண்மைக் குழு) அமைத்து அதன்படி துறைமுகங்களை சரி யான முறையில் பராமரித்து, மேற்கொ ள்வதற்கு வசதியாக இரு கமிட்டியை அமைத்து தர வேண்டும். கஜா புயலால் பாதி க்கப்பட்ட விசைப்படகுகளில் 7 படகு களுக்கு உரிய முறையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, ஆதாரங்கள் சம ர்ப்பிக்கப்படும் 9 மாதங்கள் ஆகியும் நிவார ணங்கள் வழங்கப்படாமல் உள்ளது. அரசு உடனடியாக நிவாரணத்தை வழங்கிட வேண்டும். இல்லாத பட்சத்தில் மீன வர்களை ஒருங்கிணைத்து தஞ்சை மாவட்ட கிழக்கு கடற்கரை சாலையில் சாலை மறிய லில் ஈடுபடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
மின் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை
தஞ்சாவூர் ஆக.4- தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு தஞ்சாவூர் மின் வட்டக்கிளை 19 ஆவது வட்டப் பேரவை அய்யம்பேட்டையில் ஞாயி றன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டத்த லைவர் ஏ.அதிதூத மைக்கேல் ராஜ் தலைமை வகித்தார். வட்ட துணைத் தலைவர் எஸ்.ராஜா ராமன் சங்கக் கொடியேற்றினார். கும்பகோ ணம் கோட்டச் செயலாளர் யு.ஷேக் அகமது உஸ்மான் உசேன் வரவேற்றார். வி.காமராஜ் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்து பேசி னார். மண்டலச் செயலாளர் எம்.பன்னீர்செ ல்வம் துவக்கவுரையாற்றினார். வட்டச் செய லாளர் பி.காணிக்கைராஜ் செயலாளர் அறிக்கை சமர்ப்பித்தார். வட்டப் பொருளா ளர் எம்.ஆரோக்கியசாமி வரவு செலவு அறி க்கை தாக்கல் செய்தார். புதிய தலைவராக ஏ.அதிதூத மைக்கேல் ராஜ், செயலாளராக பி.காணிக்கைராஜ், பொருளாளராக ஆரோக்கியசாமி, கௌரவத் தலைவராக து.கோவிந்தராஜ் மற்றும் துணைச் செயலாளர்கள், துணைத் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். சிஐடியு மாவட்டத் தலைவர் து.கோவி ந்தராஜூ, மாநில துணைத் தலைவர்கள் எஸ்.ரெங்கராஜன், எஸ்.அகஸ்டின், மின்வா ரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு செயலா ளர் எம்.முனியாண்டி, பொருளாளர் சி.கணே சன், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக (சிஐடியு) மாவட்ட துணைச் செயலாளர் செங்குட்டுவன், விவசாய தொழிலாளர் சங்கம் உமாபதி ஆகியோர் பேசினர். மாநில துணைப் பொதுச் செயலாளர் வி.இளங்கோ நிறைவுரை யாற்றினார். கோட்டச் செயலாளர் பி.ரமேஷ் நன்றி கூறினார். கூட்டத்தில், ‘மின்சார வாரியங்களை, தனி யார் மயமாக்கும் மின்சார சட்டத்தை கைவிட வேண்டும். மின் விநியோகத்தில் தனியார் மயத்தை கைவிட வேண்டும். மின்சார வாரி யத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு தினக்கூலி வழங்க வேண்டும். பணிநிரந்தரம் செய்ய வேண்டும். பகுதி நேரப் பணியாளர்களை உடன் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.