திங்கள், ஜனவரி 18, 2021

tamilnadu

img

விவசாயக் கடன் வழங்க நடவடிக்கை எடுத்திடுக! தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

தஞ்சாவூர், மே.27- தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை  விவசாயிகள் பிரச்சனைகள் தொடர்பாக கலந்தாலோசனைக் கூட்டம் நடை பெற்றது.  இக்கூட்டத்தில், வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், “தூர்வாரும் பணிகளை தீவிரப்படுத்தி, கடைமடை வரை பாசனத்திற்காக தண்ணீர் சென்றடையவும், விவசாயத்திற்கு தேவையான விதைகள், உரம் மற்றும் விவசாயக் கடன்கள் வழங்கிட நடவடிக்கை கோரியும்”, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.  

பின்னர் இக்கோரிக்கைகளை வலி யுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தஞ்சை மாவட்டக் குழு சார்பாக மாவட்டச் செயலாளர் என்.வி. கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், மாவட்டக்குழு உறுப்பினரும் ஒக்காநாடு கீழையூர் ஊராட்சி மன்ற தலைவருமான என். சுரேஷ்குமார், கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் கோவிந்தராஜ் ஆகியோர் அளித்த மனுவில்,  “டெல்டா மாவட்டங்களில் தமிழக அரசின் சார்பில், தற்போது சிறப்பு தூர் வாரும் திட்டத்தின் கீழ், குடிமராமத்துப் பணி கள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜூன் 12 ஆம் தேதி அன்று மேட்டூரில் இருந்து டெல்டா பாசனத் திற்காக தண்ணீர் திறந்து விடப்படுவ தற்கான ஆயத்தப் பணிகளும் நடை பெற்று வருகிறது.

தற்போது உள்ள சூழலில் கடைமடைப் பாசனப் பகுதிகள் வரை, தடையின்றி தண்ணீர் சென்று சேர வேண்டுமெனில், இப்பணிகள் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்பட வேண்டும். ஆறுகளில் தண்ணீர் வந்த பிறகு தூர்வாரும் பணி நடப்பது முறையானதாக இருக்காது. எனவே கால்வாய்கள் தலைப்பிலிருந்து கடைமடை வரை முழுமையாக தூர்வாரிட வும், மதகுகள், ஷட்டர்கள் சரிசெய்து முடிப்பதும் அவசியமானதாகும். மேலும் தூர்வாரும் பணிகள் நடைபெறும் பகுதிகளில் விபரங்கள் அடங்கிய அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.  அப்பகுதியில் உள்ள விவசாயிகள், விவசாய சங்கங்களை உள்ளடக்கிய கண்காணிப்பு குழுக்களை அமைத்து, சரி யான அளவில், முறைகேடின்றி பணிகள் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். கடைமடைப் பகுதியில் உள்ள ஏரிகள், பாசனக் குளங்களுக்கு செல்லும், நீர் வழிப்பாதைகளையும், முழுமையாக தூர்வாரிடவும், துரிதமாக பணிகளை முடித்திடவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளனர்.

;