தஞ்சாவூர், ஜூலை 16- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் ரோட்டரி சங்கம் சார்பில் புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா நடைபெற்றது.ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் ஏ.ஆர்.அன்பு விழாவிற்கு தலைமை வகித்து, புதிய நிர்வாகிகளை பதவியில் அமர்த்தி பேசினார். எரிச்சி வள்ளலார் மன வளர்ச்சி குன்றியோர் காப்பகத்துக்கு ரூ.5 ஆயிரம் மதிப்பிலான மளி கைப் பொருட்கள், பேராவூரணியைச் சேர்ந்த நலிவடைந்த குடும்பத்தைச் சேர்ந்த ரகு மான் பீவி, அவரது சகோதரர் சேக் அலாவுதீன் ஆகியோருக்கு ரூ. 5 ஆயிரம் நல த்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.