தஞ்சாவூர், ஜன.4- குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெற கோரி தஞ்சை யில் அனைத்து மகல்லா ஜமாஅத், ஜமாஅத்துல் உலமா சபை, அரசியல் கட்சிகள்,இஸ்லாமிய இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சை பனகல் கட்டடம் முன்பு வெள்ளிக்கிழமை நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஆற்றங்கரை ஜூம்மா பள்ளிவாசல் செயலாளர் முகம்மது பைரோஸ் தலைமை வகித்தார். மக்கா பள்ளி செயலாளர் ஜாகிர் உசேன் வரவேற்றார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் ஜெய்னுலாப் தீன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். ஆர்ப்பாட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் முகைதீன், முன்னாள் மத்திய இணை அமைச்சரும், தஞ்சை மக்களவை உறுப்பினருமான எஸ். எஸ்.பழனிமாணிக்கம், தமிழ் தேசிய பேரியக்கம் தலைவர் மணியரசன், மனித நேய ஜனநாயக கட்சி தலைவர் எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், முன்னாள் அமைச்சர் உபயதுல்லா, மாநகர காங்கிரஸ் தலைவர் ராஜேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் சொக்கா.ரவி, தி.க.மாவட்டச் செயலாளர் அருணகிரி, தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக் குழு தலைவர் செந்தில்குமார், மாநகர நிர்வாகி அப்துல் நசீர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வெ.ஜீவகுமார், மாநகரச் செயலாளர் என்.குருசாமி, தமிழ் தேச மக்கள் முன்னணி மாவட்டச் செயலாளர் அருண்சோரி மற்றும் இஸ்லாமிய இயக்க நிர்வாகிகள் முகம்மது, அப்பாஸ், பாதுஷா உட்பட 5000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலை வர் காதர் முகைதீன் செய்தியாளர்களிடம் கூறும்போது, மத்திய அரசு கொண்டு வந்துள்ள 2019 சிஏஏ, என்ஆர்சி குடி யுரிமை திருத்த சட்டம் மத அடிப்படையில் மக்களை பிளவு படுத்துகிறது. இது ஜனநாயகத்திற்கு எதிரான ஒரு சட்டம். இதை கண்டித்து நாடு முழுவதும் மக்கள் திரண்டு மிகப் பெரிய போராட்டம் நடத்தி வருகின்றனர். எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினாலும் இந்த சட்டத்தை திரும்பப் பெற மாட்டேன் என அமித்ஷா கூறியுள்ளார். ஆனால் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அதில் திருத்தத்தை கொண்டு வர வேண்டும். அல்லது இதை திரும்பப் பெற வேண்டும். என்ஆர்சி சட்டத்தை அசாமில் கொண்டு வருவதோடு மட்டும் நிறுத்திக் கொள்ள வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் கொண்டு வர மாட்டோம் என மத்திய அரசு தெளிவாக தெரிவிக்க வேண்டும்” என்றார்.
அறந்தாங்கி
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக கண்டன பேரணி நடைபெற்றது. இளைஞர்கள் மற்றும் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பாக பேரணி நடைபெற்றது. பேரணி, கோட்டைப்பட்டினம் நிஷா மஹாலில் தொடங்கி கிழக்கு கடற்கரை சாலை வழியாக வந்து அரசு மேல்நிலைப் பள்ளியில் முடிவடைந்தது. பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர். பேரணியில் அனை வரும் தேசிய கொடியை ஏந்தியும் குடியுரிமை மசோதா விற்கு எதிரான பாதகைகளையும் ஏந்தியபடி சென்றனர்.
மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
அறந்தாங்கி தபால் நிலையம் அருகே மாணவர் சங்க தலைவர் அறந்தை பாட்ஷா தலைமையில் ஏகத்துவ முஸ்லீம் ஜமாத் மாநில துணை பொதுச்செயலாளர் ஆவை. இமாம் அலி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணைச் செயலாளர் வழக்கறிஞர் தெ.கலைமுரசு, மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்டச் செயலாளர் முனைவர் முபாரக் அலி, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் கர்ணா, செயலாளர் நாராயணன், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஜனார்த்தனன், மமக புதுக்கோட்டை கிழக்கு மாவட்டச் செயலாளர் கீரின் முகமது, ஆகியோர் கண்டன உரையாற்றி னர். முகமது ரபிக், தமுமுக நகரத் தலைவர் உள்பட அறந்தாங்கி மாணவர்கள் சங்க செயலாளர் ரியாஸ் மற்றும் பொருளாளர் அஜ்மீர் உள்பட திரளான மாணவர்கள் ஆர்ப்பாட் டத்தில் கலந்து கொண்டனர்.