தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவப் பிரிவு, குறுகிய அறையில் செயல்பட்டு வருவதால் விரிவான புதிய கட்டிடம் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசுவிடம் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் சித்த மருத்துவப் பிரிவுக்கென தனியாக புதிய கட்டிடம் அமைக்க, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை ரூ 15 லட்சம் ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து கட்டிடப் பணிக்கான துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை மருத்துவ அலுவலர் பாஸ்கர் தலைமை வகித்தார். சித்த மருத்துவ அலுவலர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.