tamilnadu

img

திருபுவனம் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், ஜூலை 30- தஞ்சை மாவட்டம் கும்ப கோணத்திற்கு அருகில் உள்ள திருபுவ னம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டு றவு சங்கத்தின் நிர்வாக குழு காலம் முடிவடைந்ததையொட்டி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கு தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும். ஆனால் தேர்தல் நடத்தாமலேயே அதிமுக நிர்வாகிகளை மட்டும் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து கைத்தறி நெசவா ளர் கூட்டுறவு சங்கத்தின் ஆணையரி டம் அதிமுகவைத் தவிர அனைத்து கட்சி தொழிற்சங்கங்களும் முறையிட்டதன் பேரில் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகி களை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. இந்நிலையில் 300க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கைத்தறி உதவி இயக்குனரை சந்தித்து மகா சபை கூட்டத்தை நடத்த வலியுறுத்தி மனு கொடுத்தனர். ஆனால் மீண்டும் அதிமுகவினர், ஆட்சி பலத்தை கையில் வைத்துக் கொண்டு திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்திற்கு நிர்வாக குழு தன்னிச்சையாக அதிமுக வினரை மட்டும் தேர்வு செய்யப்பட்ட தாக அறிவிக்கப்பட்டது. இதனால் சட்ட விரோதமாக அறிவிக்கப்பட்ட நிர்வாக குழு நிர்வாகிகளை ரத்து செய்திட வலி யுறுத்தியும், திருபுவனம் பட்டு கூட்டு றவு சங்கத்தின் சிறப்பு பேரவை கூட்டத்தை உடனடியாக நடத்த வலி யுறுத்தி திங்கட்கிழமை திருபுவனம் கைத்தறி உதவி இயக்குனர் அலு வலக வாயில் முன்பு திகோ சில்க்ஸ் சங்க உறுப்பினர்களின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச எஸ்.கேபஞ்சநாதன் தலைமை ஏற்றார். தமாகா எம்.மோகன் சிஐடியு கே.எஸ்.சேது ஏஐடியுசி எம்.எஸ்.ஹரிதாஸ் ஐஎன்டியூசி துளசிராமன் அமமுக துளசிராஜ் மக்கள் நீதி மய்யம் எஸ்.ஆர்.ஸ்ரீதர் மகாத்மா காந்தி எஸ்.கஸ்தூரி எஸ்.ஆர் சரவணன் மதிமுக டி.சரவணன் ஜனதாதளம் ஜே.ஜே.மனோகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் திருபுவ னம் பட்டு கைத்தறி நெசவாளர் தொழிற் சங்கங்கள் கூட்டு நடவடிக்கை குழு உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.