tamilnadu

img

பயிர்க் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் வட்டாரத்தில் இதுவரை சம்பா நெற்பயிர் 3,900 எக்டரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு காப்பீடு செய்திட டிசம்பர் 15 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் தமிழக அரசின் சிறப்புத் திட்டமான கஜா வாழ்வாதார தொகுப்பு திட்டத்தின் கீழ் சிறு குறு விவசாயிகளுக்கு 100 சத மானியத்தில் வழங்கப்படும் சொட்டுநீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனக் கருவிகள், பிஎம்கிசான் திட்டத்தில் விடுபட்ட விவசாயிகள் இருந்தால் அவர்களை  சேர்க்கும் பொருட்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இரு நாட்கள் மதுக்கூர் வட்டாரத்தில் உள்ள 48 கிராமங்களிலும் வேளாண்மை இணை இயக்குநர் அறிவுரைப்படி விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப்பட்டது. வேளாண்மை உதவி இயக்குநர் திலகவதி முனைப்பு இயக்கத்தினை துவக்கி வைத்தார். மதுக்கூர் வட்டார வேளாண்மை உதவி அலுவலர்கள் ஜாஹிர், கார்த்திக், பாபி, ஜெரால்டு, சுரேஷ் மற்றும் முருகேசு ஆகியோர் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினர். ஆர்.வி.எஸ் வேளாண்மை கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீடு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினர். அட்மா திட்ட அலுவலர்கள் லீலா, சரவணி மற்றும் பெனிக்சன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.