tamilnadu

img

விமானப் படை நிலைய தென்னக தலைமை அலுவலர் வருகை

தஞ்சாவூர், அக்.16- தஞ்சாவூரில் உள்ள விமானப்படை நிலையத்திற்கு தென்னக விமானப்படை நிலைய தலைமை அலுவலர் சுரேஷ் வருகை தந்தார். அவரை தஞ்சை விமானப்படை நிலைய குரூப் கேப்டன் பிரஜூவல்சிங் வரவேற்றார்.  பின்னர், தென்னக விமானப்படை நிலைய தலைமை அலுவலர் சுரேஷ் அங்குள்ள பல்வேறு பிரிவுகளையும், விமான ஓடுதளத்தையும் பார்வையிட்டார். முன்னதாக தஞ்சை விமானப்படை நிலைய வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து விமானப்படை ஊழியர்களுடன் கலந்துரையாடினார். விமானப்படை வீரர்கள் மனைவிகள் நலச்சங்க தலைவி ராதா சுரேஷை, தஞ்சை விமானப் படை வீரர்கள் மனைவிகள் நலச்சங்கத்தின் தலைவி வந்தனாசிங் வரவேற்றார்.