tamilnadu

img

மூத்த ஹாக்கி வீரர் பல்பீர் சிங் மரணம்

மொகாலி:
இந்தியாவின் மூத்த ஹாக்கி வீரர் பல்பீர் சிங் உடல்நலக்குறைவால் திங்களன்று காலமானார். அவருக்கு வயது 96. பல்பீர் சிங் 1948, 1952, 1956 ஆகிய ஆண்டுகளில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற பெருமைக்குரியவர்.ஒலிம்பிக்கின் ஆடவர் ஹாக்கி இறுதிப் போட்டியில் தனிநபராக அவர் கோல்கள் அடித்து பதிவு செய்த உலக சாதனைகள் இன்று வரை முறியடிக்கப்படவில்லை.

உடல்நலக் குறைவால் பஞ்சாபின் மொகாலி நகரில் உள்ள போர்டிஸ் மருத்துவமனையில் கடந்த 8-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து இரண்டு வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த பல்பீர்சிங் திங்கள் காலை காலமானார். இதை அவரது பேரன் கபீர் உறுதி செய்துள்ளார்.  சிங்கிற்கு சுஷ்பீர் என்ற மகளும், கன்வால்பீர், பரன்பீர் மற்றும் குர்பீர் என மூன்று மகன்களும் உள்ளனர்.கடந்த 1957-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி பல்பீர்சிங் கௌரவிக்கப்பட்டார்.