tamilnadu

img

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் - கே.டி.இர்பான்

டோக்கியோ,


ஜப்பானில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியாவின் கே.டி.இர்பான் தடகளப்பிரிவில் தகுதி பெற்றுள்ளார்

ஜப்பானின் நோமி நகரில் ஆசிய நடை பந்தய சாம்பியன்ஷிப் போட்டியில்இந்தியாவின் கே.டி.இர்பான் 20 கிலோ மீட்டர் நடை பந்தயத்தில் கலந்து கொண்டு 4-வது இடம் பிடித்தார். அவர், 1 மணி நேரம் 20 நிமிடங்கள் 57 விநாடிகளில் கடந்திருந்தார். ஆனால் ஒலிம்பிக் தொடருக்கு தகுதி பெறுவதற்கு 1 மணி நேரம் 21 நிமிடங்களே போதுமானது.

எனவே ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் தொடருக்கு இந்தியாவில் இருந்து முதல் தடகள வீரராக 29 வயதான கே.டி.இர்பான் தகுதி பெற்றுள்ளார்.

ஒலிம்பிக்கில் நடைபெறும் நடை பந்தயம் மற்றும் மாரத்தான் போட்டிகளுக்கு தகுதி பெறுவதற்கான காலக்கட்டம் கடந்த ஜனவரி 1-ம் தேதி தொடங்கியது. இது அடுத்த ஆண்டு மே 31-ம் தேதி முடிவடைகிறது. அதேவேளையில் தடகளத்தில் உள்ள மற்ற விளையாட்டுகளுக்கு தகுதி பெறுவதற்கான காலக்கட்டம் வரும் மே 1-ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜூன் 29 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


;