சேலம்,பிப்10- சேலம் மாவட்டம் ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியின் 10 வது ஆண்டு விழா நடைபெற்றது. சேலம் ஹோலி ஏஞ்சல்ஸ் பப்ளிக் பள்ளியின் 10 வது ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் கோவை ரூட்ஸ் தொழில் நிறுவனங்களின் இயக்குநர் கவிதாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். சிறப்பு அழைப் பாளராக ஏற்காடு செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி யின் தலைமை ஆசிரியரும், தாளாளருமான பிரிட்டோ லூர்துசாமி, மரியாளின் பிரான்சிஸ்கன் ஊழியர் சபையின் பெங்களூர் மறைமாநில முன்னாள் தலைவி ஆஞ்சலா, சேலம் சரவண பவன் உணவக நிர்வாக இயக்குனர் சிவரா மன் ஆகியோர் கலந்து கொண்டனர். கடந்த கல்வி ஆண்டில் பள்ளியின் சாதனைகளை முதல்வர் பெமிலா பெர்னாண்டோ வாசித்தார். இதனை யடுத்து, மாணவிகளின் கண்கவர் நடனங்கள், நாடகங் கள், உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கல்வி மற்றும் பல்திறன்களில் சிறந்து விளங்கிய மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர்களால் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. சிறப்பு விருந்தினரின் வாழ்த்துரையுடன் விழா முடிவுற்றது.