tamilnadu

அம்பேத்கர் சிலைக்கு மரியாதை

பெரம்பலூர், ஏப்.15- அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மரியாதைசெலுத்தினர். கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.செல்லதுரை, எஸ்.அகஸ்டின், எஸ்.பி.டி.ராஜாங்கம், பி.ரெங்கராஜ், ஆர்.முருகேசன், எம்.கருணாநிதி, பி.முத்துசாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.முசிறிமுசிறி கைகாட்டியில், விடுதலை சிறுத்தைகள் கட்சிசார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா நடைபெற்றது. விழாவிற்கு தொகுதி செயலாளர் கலைச்செல்வன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் தங்கதுரை, துணை செயலாளர்கள் சந்திரசேகரன், பாலகிருஷ்ணன், ரகுபதி முன்னிலை வகித்தனர். திமுக வடக்கு மாவட்டசெயலாளர் தியாகராஜன், அம்பேத்கர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மதிமுக,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.