tamilnadu

img

நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்வு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், விவசாய சங்க அகில இந்திய பொதுச் செயலாளருமான கே.வரதராஜன் மற்றும் சேலம் மாவட்ட தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மாவட்ட செயலாளருமான பி.தர்மலிங்கம் ஆகியோரது நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்வு சேலம் சிபிஎம் மாவட்ட குழு அலுவலகமான சிறை தியாகிகள் நினைவகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி, சிஐடியு மாநில துணைத்தலைவர் ஆர்.சிங்காரவேலு, சிபிஎம் மாநில குழு உறுப்பினர் டி. ரவீந்திரன், சிபிஐ மாவட்ட செயலாளர் ஏ.மோகன், சிபிம் மாவட்ட செயற்குழு, மாவட்ட குழு உறுப்பினர்கள் மற்றும் நகர செயலாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.