சேலம், ஜன. 20- அரசுபணியாளர்களுக்கான மாநில அள விலான கூடைப்பந்து விளையாட்டுப் போட்டிக்கான தேர்வுகளில் விருப்ப முள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என சேலம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஆ.ஞானசுகந்தி தெரிவித்துள்ளார். அரசுபணியாளர்களுக்கான மாநில அள விலான கூடைப்பந்து விளையாட்டு போட்டிகளில் விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். இதுகுறித்து சேலம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளை ஞர் நலன் அலுவலர் ஆ.ஞானசுகந்தி தெரி வித்ததாவது. 2019-20 ஆம் ஆண்டிற்கான அரசு பணியாளர்களுக்கான தேசிய அளவிலான கூடைப்பந்து விளையாட்டுப் போட்டிகள் ஜன.28 ஆம் தேதியன்று பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் உள்ள குருநானக் விளை யாட்டரங்கத்தில் நடைபெறவுள்ளது. எனவே, போட்டியில் கலந்து கொள்ள வுள்ள தமிழக அணிக்கான மாநில அளவிலான கூடைப்பந்து விளை யாட்டுத்தேர்வுகள் ஜன.22ஆம் தேதியன்று மாலை 3.00 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டரங்கத்தில் நடைபெற வுள்ளது. இதில், கலந்துகொள்ள விரும்பும் சேலம் மாவட்டத்தில் பணிபுரியும் அரசு பணி யாளர்கள் நேரிடையாக தங்கள் சொந்த செலவில் கலந்து கொள்ளலாம். தினப்படி மற்றும் பயணப்படி ஏதும் வழங்கப்பட மாட்டாது. தமிழக அணிக்கு தேர்வா கும் அரசு பணியாளர்களுக்கு தேசிய அளவிலான போட்டிகளின் நாட்களுக் குரிய பயணப்படி மற்றும் தினப்படி ஆகி யவை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் வழங்கப்படும் என தெரி வித்துள்ளார்.