tamilnadu

img

சித்தார்த்தா லாஜிஸ்டிக்ஸ் பன்னாட்டு நிறுவனத்தை இழுத்து மூடு

சென்னை, மே 20 - இந்திய அரசாங்கத்தின் ‘மியூனிஷன்ஸ் இந்தியா லிமிடெட்’ நிறுவனம் மற்றும் தனி யார் நிறுவனங்கள் இஸ்ரேலுக்கு பலமுறை வெடிமருந்துகளை அனுப்பியிருக்கும் தக வல்கள், உலகில் அமைதியை விரும்பு வோருக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளன.

 குறிப்பாக, சென்னையில் செயல்பட்டு வரும் சித்தார்த்தா லாஜிஸ்டிக்ஸ் என்ற பன்னாட்டு ஏற்றுமதி நிறுவனம் ‘மரியான் டேனிகா’ என்ற கப்பலின் மூலம் வெடி மருந்து கள், வெடி குண்டுகள் என 29 டன் ஆயு தங்களை இஸ்ரேலுக்கு ஏற்றி அனுப்பி யிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சித்தார்த்தா லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம், ஆயு தங்களை ஏற்றி அனுப்பிய ‘மரியான் டேனிகா’ கப்பலை திரும்பப் பெறக் கோரியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் இணைந்து சென்னை சைதா ப்பேட்டையில் திங்களன்று ஆர்ப்பாட்டம் நடத்தின.

‘மரியான் டேனிகா’ கப்பல் ஸ்பெயின் துறைமுகத்தில் நின்று செல்ல அந்நாட்டு அரசு அனுமதி மறுத்துள்ள நிலையில், இந்திய அரசு கப்பலையே ஆயுதங்களுடன் திரும்பப் பெற வேண்டும்; சித்தார்த் லாஜிஸ் டிக்ஸ் நிறுவனத்தை மூட வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. “பாலஸ்தீனத்தில் இன அழிப்பு செய்து வரும் நடவடிக்கைகளை இஸ்ரேல் நிபந்த னையின்றி போரைக் கைவிட வேண்டும். பாலஸ்தீன மக்களுக்கு தேவையான மனிதா பிமான உதவிகளை இந்திய ஒன்றிய அரசு செய்ய வேண்டும்; மேலும், ஆயுதங்கள் அனு ப்பிய சித்தார்த் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தை மூட வேண்டும்” என்றும் ஆர்ப்பாட்டத்தில் தலைவர்கள் உரையாற்றினர்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தென் சென்னை மாவட்டத் தலைவர் எம்.ஆர். சுரேஷ் ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் தீ. சந்துரு, செயற்குழு உறுப்பினர் நிவேதா, இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ். ஆனந்த், செயலாளர் ரா. பாரதி, துணைத் தலைவர் ஸ்வேதா, செயற்குழு உறுப்பினர் அனாமிகா உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

;