tamilnadu

img

உலகச் சுற்றுச்சூழல் தினம் டெல்டா மாவட்டங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி, மரக்கன்றுகள் நடல்

திருவாரூர்/தஞ்சாவூர்,  ஜூன் 5- நாம் வாழும் பூமிப் பந்தினை யும், இயற்கையையும் காப்பாற்ற,  சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு  ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு  ஆண்டும் ஜூன் 5 ஆம் தேதி உலக  சுற்றுச்சூழல் நாளாக கொண்டா டப்படுகிறது.

உலக சுற்றுச்சூழல் தினத்தை யொட்டி, டெல்டா மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் தூய்மைப் பணி மேற்கொள்ளுதல், மரக் கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி கள் நடைபெற்றன.

திருவாரூர் புதிய ரயில் நிலை யத்தில் உலக சுற்றுச்சூழல் தின  விழிப்புணர்வு பேரணியை புதன் கிழமை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ  கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  

இந்த விழிப்புணர்வு பேரணி, திருவாரூர் புதிய ரயில் நிலையத் தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று புலிவலம் வாள வாய்க்கால் பகுதியில் நிறைவு  பெற்றது. பேரணியில் கூத்தா நல்லூர் பெண்கள் கல்லூரி, நன்னி லம் பாரதிதாசன் உறுப்பு கல்லூரி,  திரு.வி.க அரசு கலை மற்றும் அறி வியல் கல்லூரி, மன்னை ராஜ கோபாலசுவாமி அரசு கல்லூரி, வ.சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, வேலுடையார் மேல்நிலைப் பள்ளி, கஸ்தூர்பாகாந்தி மெட்ரிக் குலேசன் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். 

நிகழ்வில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் உதவி சுற்றுச் சூழல் பொறியாளர் ரெங்கராஜ், முதன்மை கல்வி அலுவலர் புக ழேந்தி, நாட்டு நலப்பணித் திட்ட  ஒருங்கிணைப்பாளர்கள், அரசு  அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மரக்கன்று நடல்

தஞ்சாவூர் மாவட்டம் பேரா வூரணி தேர்வுநிலை பேரூராட்சி சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. இதை யொட்டி பேராவூரணி பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து, செயல் அலுவலர் ராஜா தலைமையில் விழிப்புணர்வு பேரணி, அண்ணா சிலை வரை நடைபெற்றது. 

தொடர்ந்து பேராவூரணி பெரிய குளக்கரை, நீலகண்ட பிள்ளையார் ஆலய தெப்பக்குளம், நவீன எரி வாயு தகன மேடை வளாகம், பேரூ ராட்சி வளம் மீட்பு பூங்கா ஆகிய  இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட  பல்வேறு வகையான மரக்கன்று கள் நடப்பட்டன. மேலும், சுற்றுச் சூழல் தொடர்பான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. தொ டர்ந்து, எரிவாயு தகனமேடை வளா கம் முழுவதும் தூய்மை பணியா ளர்கள் தூய்மைப்படுத்தும் பணி யில் ஈடுபட்டனர். 

வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையம்

பட்டுக்கோட்டை அருகே உள்ள, வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில், உலக  சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப் பட்டது. இந்நிகழ்விற்கு தென்னை ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் முனைவர் ஆர்.அருண்குமார் தலைமை வகித்தார். 

இந்நிகழ்வில், நெகிழிப் பொருட் கள் பயன்பாட்டை தவிர்ப்பது உள் ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப் பட்டது. முனைவர்கள் மற்றும் 25-க்கும் மேற்பட்ட பண்ணைத் தொழிலாளர்கள் கலந்து கொண்ட னர். நிறைவாக, நெகிழிப் பொருட் கள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்ற னர். 

புதுப்பட்டினம்-மனோரா கடற்கரை

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், மாவட்ட வன அலு வலர் அகில் தம்பி, பட்டுக் கோட்டை வருவாய் கோட்டாட்சி யர் ஜெயஸ்ரீ ஆகியோர் அறிவுறுத்த லின்படி, உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்று நடுதல், கடற்கரை தூய்மைப் பணி,  ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன.

தஞ்சாவூர் மாவட்டம், பேரா வூரணி அருகே உள்ள மனோரா  பகுதியில் இயற்கை பேரழிவு களை தடுக்கும் வகையில், கடற் கரை பகுதி சதுப்பு நிலத்தில் அலை யாத்திக்காடு (மாங்குரோவ்) உரு வாக்கும் வகையில் நூற்றுக்கணக் கான மரக்கன்றுகள் நடப்பட்டன. தஞ்சாவூர் மாவட்டம், பேரா வூரணி அருகே உள்ள மனோரா  பகுதியில் இயற்கை பேரழிவு களை தடுக்கும் வகையில், கடற் கரை பகுதி சதுப்பு நிலத்தில் அலை யாத்திக்காடு (மாங்குரோவ்) உரு வாக்கும் வகையில் நூற்றுக்கணக் கான மரக்கன்றுகள் நடப்பட்டன. 

அதனைத் தொடர்ந்து புதுப்பட் டினம் கடற்கரையில் குவிந்து  கிடந்த நெகிழிக் கழிவுகள், குப்பை கள் அகற்றப்பட்டு தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. கடற் கரைக்கு வந்திருந்த பொதுமக்க ளோடு இணைந்து, ‘கடல் வளத்தை பாதுகாப்போம். நெகி ழிப் பொருட்களை பயன்படுத்த மாட்டோம். குப்பைகளை உரிய  இடத்தில் கொட்டுவோம். சுற்றுச் சூழலை பாதுகாப்போம்’ என விழிப் புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. 

பின்னர் வெளிவயல் கிராமத் தில் உள்ள ஓம்கார் பவுண்டேஷன் நிறுவனத்தில், 35 பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு, பட்டுக்கோட்டை வன சரக அலுவலர் சந்திரசேகரன் தலைமை வகித்தார்.  முன்னதாக ஓம்கார் பவுண்டேஷன் நிர்வாக இயக்குநர் டாக்டர் பாலாஜி வர வேற்றார். மேலாளர் அன்பு நன்றி கூறினார். 

பட்டுக்கோட்டை

பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலக வளாகத்தில், உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் பணி புதன் கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு,  பட்டுக்கோட்டை வட்டார வேளா ண்மை உதவி இயக்குநர் (பொ)  திலகவதி தலைமை வகித்தார்.  மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது. 

அரசு மருத்துவமனை 

இதே போல், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை வளாகத் தில் மரக்கன்றுகள் நடும் பணி, தூய்மைப் பணிகள் நடைபெற்றன. மருத்துவமனை வளாகத்தில் பசு மைப் பரப்பை அதிகரிக்கும் வகை யில் 200-க்கும் மேற்பட்ட மூலிகை  மற்றும் பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்பட்டன.  நிகழ்ச்சிக்கு தலைமை மருத்து வர் மீனா நியூட்டன் தலைமை வகித் தார். அனைத்து வார்டுகளுக்கும் ஊர்வலமாகச் சென்று, ‘மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்’ என முழக்கங்கள் எழுப்பப்பட்டு, விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப் பட்டது. 

பாபநாசம்

சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பாபநாசம் விவேகானந்தா தொண்டு நிறுவனம் சார்பில்  100 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.  ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பாப நாசம் கிளை  வாடிக்கையாளர்கள் 30 பேருக்கும், பாபநாசம் ஹெட்  போஸ்ட் ஆபிஸ் வாடிக்கையா ளர்கள் 30 பேருக்கும், புதிய பேருந்து நிலைய பயணிகள், தையல் பயிற்சி மாணவிகள் 40 பேருக்கும் தென்னை, செம்மரம், பலா, கொய்யா உள்ளிட்ட மரக் கன்றுகள் வழங்கப்பட்டன. 

இதில் தொண்டு நிறுவனச் செய லர் தேவராஜன், செயலர் கண்ண தாசன், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா  பாபநாசம் கிளை மேலாளர் கிரி தரன், விற்பனை மேலாளர் மது, தலைமை தபால் அலுவலக போஸ்ட் மாஸ்டர் சுமதி உள்ளிட் டோர் பங்கேற்றனர்.


 

;