tamilnadu

img

ஹாக்கி அணி பயிற்சியில் தொழிலாளி மகன்: கனிமொழி எம்பி வாழ்த்து

சென்னை:
இந்திய ஜூனியர் ஹாக்கி அணி பயிற்சி முகாமிற்கு தேர்வாகியுள்ள கோவில்பட்டியைச் சேர்ந்த தீப்பெட்டி தொழிலாளி மகனுக்கும், எம்பி கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கிக்கு பெயர் பெற்ற ஊர்களில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியும் ஒன்று. 100 ஆண்டுகளாக ஹாக்கி பயிற்சி அளிக்கப்பட்டு வருவதால் கோவில் பட்டியை “ஹாக்கிபட்டி” எனவும் அழைப் பர். தேசிய ஹாக்கி அணியில் கோவில் பட்டியைச் சேர்ந்த பல வீரர்கள் விளையாடியுள்ளனர்.
இந்நிலையில், பெங்களூருவில் நடைபெறும் இந்திய ஜூனியர் ஹாக்கி அணி பயிற்சி முகாமிற்கு சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு கோவில்பட்டியைச் சேர்ந்த மாரிஸ்வரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.அவருக்கு தூத்துக்குடி தொகுதி மக்களவை உறுப்பினர் கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்.அதில், “தேசிய அளவிலான ஹாக்கி பயிற்சி முகாமிற்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் கோவில்பட்டியை சேர்ந்த தீப் பெட்டி தொழிலாளர் மகன் மாரிஸ்வரனுக்கு வாழ்த்துகள். அவர் இதில் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு தேர்வு செய் யப்பட வேண்டும் என்பதே என்னைப் போன்ற பலருடைய ஆசை” எனக் குறிப்பிட்டுள்ளார்.