சென்னை, ஆக. 13- நீடித்த எரிசக்திக்கான எதிர்கால இந்தியா வின் தொலைநோக்கு பார்வையை பிரதிபலிக்கும் வகையில் ‘விண்டர்ஜி இந்தியா 2024’ என்ற தலைப்பில் காற்றாலை மின் உற்பத்தி வர்த்தக கண்காட்சி மற்றும் மாநாடு சென்னையில் வரும் அக்டோபர் 23 முதல் 25 வரை நடைபெறுகிறது.
காற்றாலை மின்சார உற்பத்தியில் உலக அளவில் இந்தியா முன்னணியில் உள்ளது. அதேபோல் காற்றாலைகள் அமைப்பதில் நான்காவது இடத்திலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் சிறப்பான முன்னேற்ற மும் அடைந்து வருகிறது. கடந்த ஜூன் மாத நிலவரப்படி, இந்தியாவில் அமை க்கப்பட்டுள்ள காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி திறனானது 46,656 மெகாவாட்டை எட்டி உள்ளது.
காற்றாலை மின் உற்பத்தி துறையானது இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளுக்கு கணிசமான பங்களிப்பை வழங்குவதோடு, கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு அதிக அளவிலான வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது.
மேலும், காற்றாலை மின் உற்பத்தியா னது காற்று மாசை குறைக்க உதவுகிறது, ஆற்றல் பாதுகாப்பை மேம்படுத்துகிறது மற்றும் சுத்தமான மின்சாரத்தையும் வழங்கு கிறது.
சென்னையில் அக்டோபர் மாதம் நடை பெற உள்ள கண்காட்சியில் 300 நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 10,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.