tamilnadu

img

கோவிட்-19 தடுப்பு மருந்துக்கு அவசர ஒப்புதல் பலன் தருமா? வெளிப்படைத்தன்மையுடன் அரசு நிர்வாகம் செயல்பட அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு வலியுறுத்தல்....

சென்னை:
கோவிட்-19 தடுப்பு மருந்துக்கு அவசர ஒப்புதலை தருவதற்கு அறிவியல்,சுதந்திரமான மற்றும் வெளிப்படையான தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அகில இந்திய மக்கள்அறிவியல் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து கூட்டமைப்பின் சார்பில் பொ. இராஜமாணிக்கம், டாக்டர் சுந்தரராமன், டாக்டர் ரகுநந்தன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

டிசம்பர் 9 ஆம் தேதி சந்தித்த மத் திய தரக்கட்டுப்பாடு நிறுவனத்தின் கோவிட் 19-க்கான நிபுணர் குழு சீரம்நிறுவனத்தின் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு அஸ்ட்ரா ஜெனிகா மற்றும்இந்திய அளவில் சுயமாக ஆராய்ச்சியின் மூலம் பாரத் பயோடெக் மூலம் தயாரிக்கப்பட்டு வரும் தடுப்பு மருந்துகளுக்கான அவசர ஒப்புதல் தருவதைநிறுத்தி வைத்துள்ளதை அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு வரவேற்கிறது.குறிப்பாக சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்து வரும் ஆக்ஸ்போர்டு வேக்சின் இங்கிலாந்து நாட்டிலேயே ஒழுங்குபடுத்தப்படவில்லை என்றும்அதே போல் இந்தியாவில் மூன்றாம்கட்ட சோதனைகளின் தகவல்களையும் கேட்டுள்ளது. அதே போல் பாரத்பயோடெக் நிறுவனம் முதல், இரண் டாம் கட்ட சோதனைத் தரவுகளைக் கொடுத்துள்ளது என்றாலும் மூன்றாவது சோதனைக்கட்டம் முடிவு பெற்றுஅதன் தரவுகளை பரிசீலனை செய்யவேண்டியுள்ளது. இதன் பின்னரே நிபுணர் குழு தரும் பரிந்துரைப்படியே மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் அவசர நிமித்த ஒப்புதல் தர முடியும். இத் தருணத்தில் நிபுணர் குழு அறிவியல் ரீதியாக ஆய்வுக்குட்படுத்தி அரசியல், நிர்வாக, வணிக அழுத்தத்திற்குஇடம் கொடுக்காமல் செயல்பட்டுள்ளது.

அறிவியல்ரீதியான மதிப்பீடு இல்லாத அறிவிப்பு
இந்த நிபுணர் குழுவின் முடிவு என்பது மருத்துவ செயலர், நிதி ஆயோக்தேசிய செயல்பாட்டுத் தலைவர் டாக்டர் வி.கே.பால் , இந்திய மருத்துவஆராய்ச்சி கவுன்சில் டைரக்டர் ஜெனரல் ஆகியோர் விரைவாக தடுப்புமருந்துகள் கொடுப்போம் என்ற அறிவிப்புக்கு முற்றிலும் எதிராக உள்ளது.மேற்சொன்ன அனைவரும் தடுப்புமருந்தின் அறிவியல் ரீதியான மதிப்பீடு, பாதுகாப்பு, திறன் ஆகியவற்றைக் கணக்கில் கொள்ளாமல் அறிவித்து வருகிறார்கள்.குறிப்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் டைரக்டர்ஜெனரல் மூன்றாம் கட்ட சோதனையைப் பற்றி அக்கறைப்படாமல் செலவு பயன்பாட்டைக் கவனிக்கவேண்டும் என்கிறார். இதில் கவனிக்கவேண்டியது என்னவென்றால், இந்த மையத்தின் கண்டுபிடிப்பும் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. அவசர கால அனுமதி என்பதுதேவையாக இருந்தாலும் பாதுகாப்பு, நோய்க்குறைப்பு, நோய் பரவுதல் தடுப்பு, இறப்பு ஆகியனவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். மிகத் தரமான மூன்றாம் கட்ட சோதனைத் தரவுகள் விரைவில் வரவுள்ளன. அதன் அடிப்படையில் அறிவியல் ரீதியான முடிவெடுக்க சற்று காலம் பொறுத்திருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. நமதுஉள்நாட்டு ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பு என்பது நமது தற்சார்பின் வெற்றியாக அமையும் என்றாலும் அறிவியல்பூர்வமற்ற பொது நலவாழ்விற்கான முடிவு எடுத்தல் என்பது இந்திய அறிவியல் தொழில் நுட்ப ஒழுங்குபடுத்தும் முறையையே கேள்விக்குறியாக்கும்.

மக்களின் அச்சத்தை போக்கிடுக!
நிபுணர் குழுவையும் மருந்து கட்டுப்பாட்டு ஜெனரலையும் அரசியல், நிர்வாக, வர்த்தக மனப்பான்மையுடன் அல்லாமல் மூன்றாம் கட்ட சோதனைகளின் தரவுகளை அறிவியல் கணக்கில் கொண்டு அனுமதித்தல் வேண்டும் என அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்புகேட்டுக் கொள்கிறது. மேலும் தரவுகளின் அடிப்படையில் பரிந்துரைப்பதும் அதை வெளிப்படையாக வெளியிட்டு அறிவியல் மற்றும் மருத்துவ சமூகத்தின் நம்பிக்கையையும் பாதுகாப்பு, திறன் ஆகியவற்றினை உறுதி செய்து அதன் மீது மக்கள் கொண்டுள்ள அச்சத்தையும் விலக்க வேண்டும். குறிப்பாக கோவிட்-19க்கு எதிராக இந்தியா சுயமான தடுப்பு மருந்துகண்டுபிடித்து அமல்படுத்துவதை உலகமே மிகவும் கவனிக்கக்கூடியதாக உள்ளது. அவசர கால ஒப்புதலை அளிக்கும் பட்சத்தில் தடுப்பு மருந்து கொடுப்பதற்கான விரிவான கண்காணிப்பும் அதற்கு முன் மூன் றாம் கட்ட சோதனைகளையும் மற்றும்அதன் பரிசீலனைகளையும் ஆராய்ச்சிஇதழ்களில் வெளியிடுதலும் முக்கியமாகும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

;