தமிழகத்தில் உள்ள காவல் பணியிடங்களை நிரப்ப காலதாமதம் ஏன் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது.
தமிழகத்தில் காவல்பணியிடங்களை நிரப்புவது மற்றும் ஊதிய உயர்வு செய்வது குறித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பபட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன் புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது பிற துறைகளை சேர்ந்தவர்கள் போராட்டங்கள் நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காண்கின்றனர். ஆனால் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட முடியாது. இந்நிலையில் காவலர்களின் கோரிக்கையை ஏற்பதில் காலதாமதம் செய்யலாமா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும் காவல்துறை பணியிடங்களை நிரப்புவது ஊதிய உயர்வு குறித்து நாளை பிற்பகலுக்குள் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். தவறும் பட்சத்தில் தமிழக உள்துறை செயலாளர் மற்றும் தமிழக காவல்துறை தலைவர் ஆகியோர் காணொலி காட்சி வாயிலாக ஆஜரா நேரிடும் என்றும் தெரிவித்தனர்.