tamilnadu

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக, பாமக உட்பட 29 வேட்புமனுக்கள் ஏற்பு

விழுப்புரம், ஜூன் 24 - விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளின் வேட்புமனுக்கள் உட்பட 29 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதாகவும், 35 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் அறிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10 அன்று நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் ஆணையம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மாதம் 14-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது. 21-ம் தேதி மொத்தம் 64 மனுக்கள் பெறப்பட்டன.

அவ்வாறு பெறப் பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை திங்கள் கிழமை காலை 11 மணியளவில் விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் நடைபெற்றது. பரிசீலனையில் திமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளின் மனுக்கள் உட்பட 29 மனுக்கள் ஏற்றுக் கொள்வதாகவும்,

சுயேச்சை வேட்பாளர்களான கனியாமூர் பள்ளி மாணவி யின் தாய் செல்வி, விநாயகம், இசக்கிமுத்து உள்ளிட்ட 35 பேரின் மனுக்கள் நிராகரிக்கப் பட்டுள்ளதாகவும் தேர்தல் அலுவலர் சந்திரசேகர் தெரிவித்தார். மனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து செல்வி உள்ளிட்ட சில சுயோட்சை வேட்பாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அதிகாரிகள் சமாதானப்படுத்தினர்.