காஞ்சிபுரம் மக்களவைத்தொகுதியில் திமுக வேட்பாளர் செல்வம் அமோக வெற்றிபெற்றார். அவருக்கு வெற்றிபெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அலுவலர் கலைச்செல்விமோகன் வழங்கினார். அமைச்சர் தா.மோ.அன்பரசன், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி.எழிலரசன் மற்றும் கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.