புதுக்கோட்டை:
தலைமை பொறுப்புக்கு யார் வரவேண்டும் என்பதை அந்தந்தக் கட்சிகள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று உள்துறைஅமைச்சர் அமித்ஷாவுக்கு காங்கிரஸ்நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு பதிலளித்தார். திங்கள் கிழமையன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
சென்னை வந்திருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசிய அரசியல் கண்டனத்துக்குறியது. அனைத்துக் கட்சிகளிலும் வாரிசுகள் இருக்கத்தான் செய்கின்றனர். தலைவர்களின் வாரிசுகள் கட்சியில் இருக்கக்கூடாது என்பது சரியல்ல. தங்கள் கட்சியின் தலைமை பொறுப்புக்கு யார்வர வேண்டும் என்பதை அந்தந்த கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் முடிவு எடுக்கவேண்டும். வாரிசுகள் அரசியலுக்கு வருவரை ஏற்றுக்கொள்ள வேண் டுமா? வேண்டாமா? என்பதை மக்கள் தான் முடிவு எடுக்க வேண்டும்.
அமித்ஷா முன்னிலையில் அதிமுக- பாஜக கூட்டணியை உறுதிசெய்துள்ளனர். தமிழகத்தில் பாஜகவுக்கு ஓட்டு இல்லை என்பதைவிட அவர்களுக்குஎதிர்மறையான ஓட்டுக்கள் அதிகஅளவில் உள்ளது என்பதுதான் உண்மை. இதுகுறித்து முதலமைச்சரே சர்வே எடுத்துக் கொள்ளலாம். இந்நிலையில், அதிமுக-பாஜக கூட்டணியால் திமுக கூட்டணிக்கு மேலும் பலம் அதிகரித்துள்ளது.தமிழகத்தில் சாதி மதம் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது. மூன்றாவது,நான்காவது, ஐந்தாவது அணி என எத்தனைஅணிகள் வேண்டுமானாலும் உருவாகலாம். ஆனால், பிரதானமாக திமுக, அதிமுக தலைமையிலான இரண்டு அணிகளுக்கு இடையே தான் நேரடிப் போட்டி, வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது, சட்டம் அனைவருக்கும் சமமானது. ஆனால், எதிர்கட்சியினரை மட்டும் பழிவாங்குவது முறையல்ல. இவ்வாறு அவர் கூறினார்.