சென்னை, மே 14 - தமிழ்நாட்டில் பதினொன்றாம் வகுப்பு (பிளஸ் 1) பொதுத் தேர்வில் 91.17 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ள னர். இது கடந்தாண்டை காட்டிலும் அதிகமாகும்.
தமிழ்நாடு மாநில பாடத்திட்டத் தின் கீழ் பயின்ற 11-ஆம் வகுப்பு மாண வர்களுக்கான பொதுத் தேர்வுகள், கடந்த மார்ச் 4 அன்று துவங்கி 25-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 3 ஆயி ரத்து 302 மையங்களில், 3 லட்சத்து 84 ஆயிரத்து 351 மாணவர்கள், 4 லட்சத்து 26 ஆயிரத்து 821 மாணவிகள் என 8 லட்சத்து 11 ஆயிரத்து 172 மாணவ - மாணவியர் தேர்வு எழுதினர். இது தவிர, 5 ஆயிரம் தனித்தேர்வர்கள், 187 சிறைவாசிகளும் பிளஸ் 1 தேர்வை எழுதினர்.
தேர்வு முடிவுகள் வெளியீடு
தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியின் போது தான் முதன் முதலாக 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி, தற்போது, 6-ஆவது ஆண் டாக நடைபெற்ற பிளஸ் 1 பொதுத் தேர்வின் முடிவுகளை, மே 14 செவ்வாய் கிழமை காலை 9.30 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந் துள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககம் அலுவலகத்தில் தேர்வுத்துறை இயக்கு நர் சேதுராம வர்மா வெளியிட்டார்.
தேர்வு முடிவுகள் http://tnresults.nic.in, http://dge.tn.gov.in என்ற இணைய தளங்களிலும் வெளியிடப் பட்டன. மாணவர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு குறுஞ் செய்தியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த தேர்வில், ஒட்டுமொத்தமாக 7 லட்சத்து 39 ஆயிரத்து 539 மாண வர்கள் 91.17 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாற்றுத்திற னாளி மாணவர்களில் 7504 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் தேர்வு எழுதிய சிறைவாசிகளிலும் 170 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு மொத்தமாக 7 லட்சத்து 76 ஆயிரத்து 844 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 7 லட்சத்து 06 ஆயி ரத்து 413 மாணவர்கள் தேர்ச்சி பெற்ற னர். தேர்ச்சி 90.93 விழுக்காடாக இருந் தது. தற்போது, கடந்த ஆண்டைக் காட்டி லும் தேர்ச்சி விழுக்காடு 0.24 விகிதம் அதிகரித்துள்ளது.
கோவை, ஈரோடு, திருப்பூர் டாப்!
மாநில அளவில் கோவை மாவட்டம் அதிகபட்ச தேர்ச்சி விழுக்காட்டைப் பெற்று சாதனை படைத்துள்ளது95.56 விழுக்காடு தேர்ச்சியுடன் ஈரோடு மாவட்டமும், 95.23 விழுக்காடு தேர்ச்சியுடன் திருப்பூர் மாவட்டமும் இரண்டாவது - மூன்றாவது இடங் களைப் பிடித்துள்ளன.
மாணவிகள் அசத்தல்!
வழக்கம்போல மாணவிகளே அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி அடைந்துள் ளனர். 4 லட்சத்து 4 ஆயிரத்து 143 மாணவி கள் தேர்ச்சி என்பது, தேர்வு எழுதி யவர்களின் எண்ணிக்கையில் 94.69 விழுக்காடு ஆகும். மாணவர்கள் 3 லட்சத்து 35 ஆயிரத்து 396 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 87.26 விழுக்காடு ஆகும். மாணவர்களை விட 7.43 விழுக்காடு அதிகம் தேர்ச்சி பெற்று மாணவிகள் அசத்தியுள்ளனர்.
கடைசி 5 மாவட்டங்கள்
வேலூர் 81.40 விழுக்காடு, திருவள்ளூர் - 85.54 விழுக்காடு, கள்ளக்குறிச்சி 86.00 விழுக்காடு, மயிலாடுதுறை 66.02 விழுக்காடு, திருப்பத்தூர் 86.88 விழுக்காடு என்ற தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் மாநிலத்தில் கடைசி ஐந்து இடங்களைப் பெற்றுள்ளன.
நூற்றுக்கு நூறு !
தமிழ்ப் பாடத்தில் 8 மாணவர்களும், ஆங்கிலத்தில் 13 பேரும், இயற்பியலில் 696 பேர், வேதியியல் 493 பேர், உயிரியலில் 171 பேர், கணிதத்தில் 779 பேர், தாவர வியலில் 2 பேர், விலங்கியலில் 29 பேர், கணினி அறிவியலில் 3 ஆயிரத்து 432 பேர், வணிகவியலில் 620 பேர், கணக்குப் பதிவியல் 415 பேர், பொருளியலில் 741 பேர், கணினிப் பயன்பாடுகளில் 288 பேர், வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியலில் 293 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.