tamilnadu

img

‘பெண் காவலர்கள் கூடி என்னைத் தாக்கினார்கள்’ சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் தகவல்

திருச்சிராப்பள்ளி, மே 15 - பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் கூறியுள்ளார்.

பெண் காவலர்களை அவதூறாக பேசிய குற்றச்சாட்டில் சவுக்கு யூ டியூப் சேனலை நடத்தும் ‘சவுக்கு’  சங்கர், கோவை சைபர் க்ரைம்  போலீஸாரால் கைது செய்யப் பட்டார். அடுத்தடுத்து வந்த புகாரின் பேரில் தேனி, திருச்சி, சென்னை போலீ சாரும் சங்கரை கைது செய்தனர்.

இந்நிலையில், சவுக்கு சங்கரை திருச்சி போலீசார் புதன்கிழமை காலை கோவை மத்தியச் சிறையில் இருந்து திருச்சிக்கு அழைத்து வந்தனர். பின்னர், அவரை திருச்சி மாவட்ட 3-வது கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தினர். சவுக்கு சங்கரை திருச்சியைச் சேர்ந்த மகளிர் போலீசாரே அழைத்து வந்தனர்.

மேலும், திருச்சி நீதிமன்ற வளாகத்திலும், நூற்றுக்கும் அதிகமான பெண் காவலர்களே பாது காப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டி ருந்தனர். பெண்களை இழிவு படுத்திய சங்கருக்கு எதிராக 50-க்கும்  மேற்பட்ட பெண்களும் துடைப்பத்து டன் நீதிமன்ற வளாகத்தில் திர ண்டிருந்தனர். இதனால் நீதிமன்ற வளாகம் பரபரப்புடன் காணப் பட்டது. இதனிடையே, திருச்சி மாவட்ட 3-வது கூடுதல் உரிமை யியல் நீதிமன்ற நீதிபதி ஜெய பிரதா முன்பு சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, காலையில் கோவை மத்தியச் சிறையில் அழைத்து வந்த பெண் போலீசார், காலை உணவுக்கு பொங்கல் வாங்கித் தந்ததாகவும், அதன் பிறகு, கண்ணாடியை கழட்டி வைக்கச் சொல்லிவிட்டு, பெண்  காவலர்கள் தன்னை தாக்கியதாக வும் கூறினார்.

இதையடுத்து வழக்கை விசா ரித்த நீதிபதி, சவுக்கு சங்கருக்கு திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். 

;