வெள்ளி, மார்ச் 5, 2021

tamilnadu

img

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பிரச்சாரம்

1...மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருவள்ளூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் முனைவர் கே.ஜெயக்குமாரை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருவள்ளூர், மணவாள நகரில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. வட்டக்குழு உறுப்பினர் எஸ்.விஜயகுமார் தலைமை தாங்கினார். மத்தியக் குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் எஸ். கோபால், செயற்குழு உறுப்பினர் டி.பன்னீர் செல்வம், ஆர்.ஏ.மோகனா, கே.ராஜேந்தி ரன், வட்டச் செயலாளர் ஆர்.தமிழரசு, வி.சி.க மாவட்டச் செயலாளர் சித்தார்த்தன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சிதம்பரம், சிபிஐ வட்டச் செயலாளர் வி.சரவணன், திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


2...மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வடசென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர்.வீ.கலாநிதியை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சி எம்எல்ஏ தமிம்முன் அன்சாரி ராயபுரத்தில் பிரச்சாரம் செய்தார்.


3...திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு மதுரவாயல் பகுதி 148, 149, 151, 152, 153, 154, 155 ஆகிய வட்டங்களில் வாக்கு சேகரித்தார். மதுரவாயல் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாநிலக்குழு உறுப்பினருமானக.பீம்ராவ், பகுதிச் செயலாளர்கள் காரம்பாக்கம் க.கணபதி (திமுக), வி.தாமஸ் (சிபிஎம்) உள்ளிட்டு தோழமைக் கட்சியினர் கலந்து கொண்டனர்.

;