தஞ்சாவூர், ஏப்.4-தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் கபிஸ்தலம் பாலக்கரை அருகில் புதன் கிழமை மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திமுக மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் செ.ராமலிங்கத்தை ஆதரித்து தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. மக்கள் விரோத மத்திய,மாநில அரசுகளை அகற்றிடவும், மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணியின் மயிலாடுதுறை நாடாளுமன்ற வேட்பாளர் செ.ராமலிங்கத் துக்கு வாக்குகள் கேட்டும், நடைபெற்ற கூட்டத்திற்கு ஒன்றிய குழு உறுப்பினர் சி.கணேசன் தலைமை வகித் தார். சிஐடியு மாவட்டத் தலைவர் டி. கோவிந்தராஜ், சிபிஎம்ஒன்றியச் செயலாளர் பி.எம்.காதர் உசேன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் பி.விஜயாள், வி.உமாபதி, ஏ.ஆர்.ஷேக் அலாவுதீன், டி.முருகேசன், பி.கே.ஆர்.இளங்கோவன், ஏ.மாலதி, சேகர், ரவி உள்ளிட்டபலர் கலந்து கொண்டனர்.