செவ்வாய், ஜனவரி 19, 2021

tamilnadu

கஞ்சா விற்றவர் கைது

தேனி, ஏப்.23-தேவதானப்பட்டியில் கஞ்சா விற்ற முதியவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.தேவதானப்பட்டி அருகே எழுவனம்பட்டி பிரிவு பகுதியில் சார்பு ஆய்வாளர் ஈஸ்வரி ரோந்து சென்ற போது பெருமாள் கோவில்பட்டியை சேர்ந்த ஆண்டவர் (65) என்பவர் சாக்கு பையில் போட்டு கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்தார் .அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்து ஒன்றரைக் கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

;