நாலுகால் பாய்ச்சலில் கல்வித்துறை வளர்ச்சி முதலமைச்சர் பெருமிதம்
சென்னை, மே 31- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நாளிதழ்களில் வெளியான செய்தியை மேற்கொள்காட்டி தனது ‘எக்ஸ்’ தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அரசின் மூன்றே ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கல்வித்துறை கண்டுள்ள நாலுகால் பாய்ச்சல் வளர்ச்சிக்கு இன்றைய செய்தித் தாள் களில் வந்துள்ள செய்திகள் சாட்சி!
20 ஆயிரத்து 332 அரசு - அரசு உதவி பெறும் பள்ளிகளில் இணைய வசதி, 519.73 கோடி ரூபாயில் உயர் தொழில் நுட்பத்துடன் கூடிய ஆய்வகங்கள், 22 ஆயிரத்து 931 ஸ்மார்ட் வகுப்பறைகள், புதுமைப் பெண், நான் முதல்வன் திட்டங்களினால் உயர்கல்வியில் சேரும் பெண்கள், மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு” என்பன உள்ளிட்ட அம்சங்களைச் சுட்டிக்காட்டியுள்ள முதல்வர், “நம் இலக்கை நோக்கிய நீண்ட பயணத்தின் தொடக்கம் தான் இது! பயணத்தைத் தொடர்வோம்! தமிழ்நாட்டை உயர்த்துவோம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
டெக்னிக்கலாக பதில்கூறி தேர்தல் ஆணையம் விசுவாசம்
சென்னை, மே 31- பிரதமர் மோடியின் தியான நாடகம், அரசியல் நடவடிக்கை; இறு திக்கட்டத் தேர்தலுக்கான மவுனப் பிரச்சாரம்; எனவே, அதற்கு தடை விதிக்க வேண்டும்; தியானக் காட்சியை ஒளிபரப்பத் தடை விதிக்கவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன் மற்றும் திமுக, காங்கிரஸ் கட்சிகள் புகார் அளித்திருந்தன.
இந்நிலையில், மக்கள் பிரதிநிதித் துவச் சட்டத்தின் 126-ஆவது பிரிவின் படி, தேர்தலுக்கு முந்தைய 48 மணி நேரத்திற்கு அமைதி காக்க வேண்டும் என்பதில், பொதுக் கூட்டங்களோ, பொதுப் பிரச்சாரங்களோ கூடாது என்று உள்ளது, அதில் தியானம் என்ற குறிப்பு இல்லை என்று டெக்னிக்கலாக பதில் கூறி, மோடிக்கும் பாஜகவுக்கும் தேர்தல் ஆணையம் தனது விசுவாசத்தைக் காட்டியுள்ளது.
‘எண்ணும் எழுத்தும்’ ஆசிரியர்களுக்கு பயிற்சி
சென்னை, மே 31 - மாநில அளவிலான கருத்தாளர்களுக்கான பயிற்சி ஜூன் 11 முதல் 14-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
மாவட்ட அளவிலான கருத்தாளர் பயிற்சி ஜூன் 18 முதல் 21-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. வட்டார அளவிலான ‘எண்ணும் எழுத்தும்’ பயிற்சி ஜூன் 24 முதல் 29-ஆம் தேதி வரை நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
வெள்ளத்துரை பணியிடை நீக்கம் ரத்து!
சென்னை, மே 31- “என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்” என கூறப்படும் ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை, மே 31-ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற இருந்த நிலையில் அவரை அதி ரடியாக பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. 2013-ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில், போலீஸ் காவலில் நடந்த மரணம் தொடர்பான வழக்கின் விசார ணை முடிவில் இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டதாக தகவல்கள் வெளியா கின. 2003-இல்சென்னையில் பிரபல தாதாவான அயோத்திக்குப்பம் வீரமணி யை ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை என் கவுண்டர் செய்தார். 2013-ஆம் ஆண்டு மருது பாண்டியர் குருபூஜை யின் போது எஸ்.ஐ. ஆல்வின் சுதன் அடித்துக் கொலைசெய்யப்பட்டார். ஆல்வின் சுதன் கொலைவழக்கில் தொடர் புடைய இருவரையும் வெள்ளத்துரை என்கவுண்டர் செய்தார்.
தற்போது, திருவண்ணாமலை குற்ற ஆவண காப்பக ஏ.டி.எஸ்.பி.யாக வெள்ளத்துரை பணியாற்றி வந்த நிலை யில், அவர் பணியிடை நீக்கம் செய்யப் பட்டார். இந்நிலையில் மாலையில் பணி யிடை நீக்க உத்தரவு ரத்து செய்யப்பட்டது.
இர்பான் விளக்கம் : மருத்துவத்துறை திருப்தி
சென்னை, மே 31- குழந்தையின் பாலினத்தை கருவிலேயே கண்டறிந்து பொது வெளி யில் தெரிவித்தது தொடர்பான புகார் களுக்கு டியூபர் இர்பான் அளித்த விளக்கம் திருப்தி அளிப்பதாக மருத்து வத்துறை அதிகாரிகள் தெரிவித்துள் ளனர். மேலும் இர்பான் பதில் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக மருத்துவத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இதனால், யூடியூபர் இர்பான் மீது நடவடிக்கை எதுவும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.