tamilnadu

img

‘நீட்’டை ஒழித்துக் கட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை! முதல்வர் உறுதி!

சென்னை, ஜூன் 7- நடந்து முடிந்த நீட் நுழைவு தேர்வில் முறைகேடு நடந்திருப்ப தாக குற்றம்சாட்டி, தேர்வை ரத்து செய்ய வேண்டுமென மாண வர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

நாடு முழுவதும், கடந்த மே 5 அன்று 4,750 மையங்களில் நீட்  தேர்வு நடைபெற்றது. இதன் முடிவு கள் அண்மையில் வெளியான நிலையில், எந்த ஆண்டும் இல்லாத அளவில் இந்த ஆண்டு 67 மாண வர்கள் 720-க்கு 720 மதிப்பெண் கள் பெற்று முதலிடம் பிடித்தனர். மேலும் முதலிடம் பிடித்தவர்களில் 8 பேர் ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் என்பதும், அவர் களில் 6 பேரின் பதிவு எண் ஒரே  வரிசையில் தொடங்குவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, நீட் தேர்வில் இயற்பியல் பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட கேள்வி,  பழைய பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப் பட்டதாகவும், இது தொடர்பாக மாணவர்கள் முறையிட்டதால் கரு ணை மதிப்பெண் வழங்கப்பட்ட தாகவும் தேசிய தேர்வு முகமை விளக்கம் கொடுத்துள்ளது.

இந்தப் பிரச்சனைகளை யொட்டி நீட் தேர்வில் குளறுபடி நடந்துள்ளது அப்பட்டமாக தெரி கிறது என எதிர்க்கட்சிகள் கூறி வரு கின்றனர். உயர்நீதிமன்ற மேற்பார் வையில் உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், “நீட் என்னும் பிணியை அழித்தொழிக்க கரம் கோர்ப்போம்” என தமிழ்நாடு முத லமைச்சர் மு.க. ஸ்டாலின் அறை கூவல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட் டிருக்கும் சமூகவலைதள பதிவில், “சமீபத்திய நீட் தேர்வு முடிவுகள் தொடர்பாக வெளிவரும் செய்தி கள் இந்த தேர்வுக்கு எதிரான நமது கொள்கை நிலைப்பாடு நியா யமானது என்பதை உறுதிப்படுத்து கிறது.

வினாத்தாள் கசிவுகள், குறிப் பிட்ட மையங்களில் இருந்து மொத்தமாக அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள், கரு ணை மதிப்பெண்கள் என்ற போர்வையில் நடைமுறைக்குச் சாத்தியமற்ற அளவில் மதிப்பெண் களை அள்ளி வழங்குவது போன்ற குழப்பங்கள் தற்போதைய ஒன்றிய அரசின் அதிகார குவிப்பு குறைபாடுகளை வெட்டவெளிச் சம் ஆக்குகின்றன.

இவை, தொழில் படிப்புகளுக் கான மாணவர் சேர்க்கை நடை முறையைத் தீர்மானிப்பதில் மாநில அரசுகள் மற்றும் பள்ளிக் கல்வி முறை மீண்டும் முதன்மை பெற வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.

மீண்டும் ஒருமுறை அழுத்தந் திருத்தமாக சொல்கிறோம்:

நீட் மற்றும் பிற தேசிய நுழை வுத் தேர்வுகள் ஏழை மாணவர் களுக்கு எதிரானவை. அவை கூட்டாட்சியியலை சிறுமைப்படு த்துபவை. சமூக நீதிக்கு எதி ரானவை. தேவையுள்ள இடங் களில் மருத்துவர்களின் இருப்பை பாதிப்பவை. நீட் என்னும் பிணி யை அழித்தொழிக்க கரம்கோர்ப் போம்! நீட்டை ஒழித்துக்கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை” என தெரிவித்துள்ளார்.

;