இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோடை காலம் என்பதால் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி செல்சியஸுற்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.
இந்நிலையில், கோவை ,விருதுநகர்,மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கோடை மழை பெய்ததால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இந்நிலையில், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, கரூர், திருச்சி, நாமக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி,தி.மலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.