tamilnadu

img

விற்பனைகுழு உறுப்பினர் தேர்வில் வெற்றி பெற்றவர்கள்

விற்பனைகுழு உறுப்பினர் தேர்வில் வெற்றி பெற்றவர்கள்

சென்னை மாநகராட்சி மணலி மண்டலம் 3 விற்பனைக்குழு உறுப்பினருக்கான தேர்தலில் சிஐடியு சார்பில் போட்டியிட்ட எம்.புவனேஸ்வரி (மாற்றுத்திறனாளி பிரிவு),  ஆர்.மகேஷ் (தாழ்த்தப்பட்டோர் பிரிவு), எஸ்.சுமதி (மகளிர் பொது பிரிவு), என்.பாலன் (பொது பிரிவு), நடராஜ், எம்.முகமது முஜிபூர் (சிறுபான்மை பிரிவு), கே.லட்சுமணன் (பிற்படுத்தப்பட்டோர் பிரிவு) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

விவசாயிகள் பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து சனிக்கிழமையன்று (ஜூன் 28), தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கும்மிடிப்பூண்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தவிசஒன்றிய தலைவர் எம்.ரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநில செயலாளர் பி.துளசிநாராயணன், ஒன்றிய செயலாளர் எம்.சிவக்குமார், மாவட்ட குழு உறுப்பினர்கள் பி.கதிர்வேல், பி.கருணாமூர்த்தி, சிபிஎம் ஒன்றிய செயலாளர் டி.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பேசினர். வாலிபர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ப.லோகநாதன், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் கே.அர்ஜுனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.